உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்யாணம் ஆயிடுச்சா ஆதாரம் காண்பி: ஓயோ போட்ட விதியால் சலசலப்பு; சமூகதளங்களில் கலகலப்பு!!

கல்யாணம் ஆயிடுச்சா ஆதாரம் காண்பி: ஓயோ போட்ட விதியால் சலசலப்பு; சமூகதளங்களில் கலகலப்பு!!

முன்பெல்லாம் ஹோட்டல்கள், லாட்ஜ்களில் ரூம் புக் செய்ய வேண்டுமென்றால், நேரடியாக சென்று அங்குள்ள ரிசப்சனில் கேட்டு, அவர்களிடம் ஏதேனும் அடையாள அட்டையை காண்பித்தால்தான் 'புக்' செய்ய முடியும். அதனை எளிதாக்கும் நோக்கில், எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த ஹோட்டல், லாட்ஜ்களில் வேண்டுமானாலும் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை ஓயோ இணையதளம் ஆரம்பித்தது. இந்த தளத்துடன், பல ஹோட்டல்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.அதில், 18 வயது நிரம்பியவராக இருந்தால் போதும், ஹோட்டல் / லாட்ஜ்களை தேர்வு செய்வதுடன், அங்குள்ள வசதிகள், அறையின் உள்தோற்ற புகைப்படங்கள் போன்றவற்றையும் பார்த்து, வாடிக்கையாளர்களின் கருத்துகளையும் பார்த்து 'புக்' செய்து கொள்ளலாம். மக்களுக்கு எளிதான சேவைகளை வழங்க முன்னெடுக்கும் எந்த முயற்சியானாலும், அதனை தவறாக பயன்படுத்துவதற்கும் 'சிலர்' இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். அப்படித்தான் இந்த ஓயோ இணையதளத்தின் முன்பதிவை, தவறான விஷயங்களுக்காக பயன்படுத்த துவங்கிவிட்டனர்.காதலர்கள், தங்கள் பிரைவசிக்காக கூட ஓயோ மூலமாக ரூம் புக் செய்கின்றனர். அதில் சில தவறான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். சில இடங்களில் விபச்சாரம் கூட நடந்தது. இப்படி நாடு முழுவதும் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் ஓயோ நிறுவனம் அதிரடியான ஒரு முடிவை எடுத்தது. அதாவது, 'திருமணமாகாத ஜோடிகளுக்கு ரூம் கிடையாது. முன்பதிவு செய்யும்போதும், ஹோட்டலுக்கு வரும்போதும், ஜோடிகள் திருமண உறவை உறுதி செய்யும் திருமணச் சான்றிதழ் போன்றவற்றை காட்ட வேண்டும்' என்று அறிவித்துள்ளது.

திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே ரூம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பலர் வரவேற்றும், சிலர் விமர்சித்தும் வருகின்றனர். இணையதளத்தில் பல்வேறு மீம்ஸ்களும் பறக்கின்றன. ஓயோவின் அறிவிப்பால் ஜோடி கிடைக்காத 'சிங்கிள்ஸ்' ஆனந்த கூத்தாடுவது போலவும், ரூம் புக் செய்பவர்களில் யாராவது 'ஒருவர்' திருமணம் செய்திருந்தாலும் அனுமதிப்பீர்களா என நக்கலடிப்பது போலவும், ஓயோ என்பதன் ஆங்கில எழுத்தான OYO என்பதில் இரண்டு 'ஓ' எழுத்தையும் திருமண மோதிரம் போன்று வடிவமைத்தும் மீம்ஸ்களை பரப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 07, 2025 21:45

கல்யாணம் ஆயிடுச்சுன்னா, அப்புறம் எதுக்குயா இங்கே வந்து ரூம் போடறோம்??


வேணுகப்பால், S
ஜன 07, 2025 23:11

அண்ணா வை குண்டர், சூப்பருங்க. 21 ஆம் பக்கத்தில போட்டு இருந்தச்சு. செரியா சொன்னீங்க.


Ramesh Sargam
ஜன 07, 2025 20:37

ஆதாரம் என்ன பெரிய ஆதாரம்... காசு கொடுத்தா நூறு ஆதாரம் கொடுக்க தரகர்கள் உள்ளனர். அதிகம் கொடுத்தா பிறந்த குழந்தைகளை வாடகைக்கு கொடுப்பார்கள். பிறகு, கல்யாணம் ஆயிடிச்சு, குழந்தையும் இருக்கு என்று சொல்வார்கள்.


Jai Sankar Natarajan
ஜன 07, 2025 19:40

இரண்டு ரூம் எடுத்து, சிறிது நேரம் கழித்து இருவரும் ஓரே ரூமில் இருந்தால் என்ன செய்விர்கள் ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 07, 2025 18:55

ஈவேரா எங்களுக்கு அப்படி வழிகாட்டவில்லை .....


Oru Indiyan
ஜன 07, 2025 17:54

இந்த விதி முறைகளை வாடகைக்கு வீடு கொடுப்பவர்களும் பின்பற்ற வேண்டும். வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்பவர்கள் உண்மையான கல்யாணம் ஆன ஜோடி தானா என்பது எப்படி தெரியும்.


Ganesh
ஜன 07, 2025 17:36

இங்கு கருத்து போடுபவர்கள் எல்லாம் ஒன்று யோசிக்க வேண்டும்.... இப்பொழுது எல்லா டிவி இலையும் / இன்டர்நெட் லையும் பாலுணர்ச்சியை தூண்டும் எல்லாமே வந்து விட்டது.. இப்போது பதிமூன்று வயது பசங்களுக்கு எல்லாமே தெரியும்... அவர்கள் பாலுணர்வே எப்படி தனிப்பார்கள்? இப்போது நாட்டுக்கு மிகவும் தேவையானது ரெண்டு சட்டங்கள் தான்.. ஒரு பெண்ணை கற்பழிக்கும் கயவர்களை ஒரே மாதத்தில் தூக்கலிட வேண்டும்... ரெண்டாவது விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்... அதாவது தனி மனிதனின் பாலுணர்வுக்கு வடிகால் கொடுத்தும் அவன் மற்ற பெண்களிடம் சென்றால் அவனை தூக்கல்லிட வேண்டும்... இப்படி செய்தால் நாட்டில் பெண்கள் கடத்தல், விபச்சார கேஸ், பிளாக்மெயில்,கற்பழிப்பு குற்றம் எல்லாம் குறையும்... இதே செய்தால் சிறிது காலம் கழித்து செக்ஸ் மீதான ஈர்ப்பு போய் நம் இளைய தலைமுறை முன்னேற்றத்தை நோக்கி செல்வார்கள்...இப்பொழுது போல் பெண்கள் பின்னால் சென்று நேரத்தை வாழ்க்கையை வீணடிக்க மாட்டார்கள்... அதே போல் பெண்களும் தைரியமாக நடமாட முடியும்


Indian
ஜன 07, 2025 16:42

இதில் என்ன சலலப்பு ??? அவர்கள் திருமணமத்திற்கான ஆதாரம் கேட்பதில் எந்த தவறும் இல்லை . ஒரு நல்ல காரியமும் செய்ய விடாதீங்க ....


ديفيد رافائيل
ஜன 07, 2025 16:25

OYO தயிநபர் book பண்ணலாம், couples book பண்ணா தான் இந்த condition. ஏதோ சமூக வலைத்தளத்தில் இந்த தலைப்பு செய்திக்காக இப்படி பண்ணுகின்றனர்


Amar Akbar Antony
ஜன 07, 2025 16:18

சமூகம் சீரிழந்து போனதில் இவையும் ஒன்று முதலில் சினிமா பின்னர் டீ வி சீரியல் பின்னர் குடி போதை வஸ்துக்கள் சுலபமாக புழங்கும் நகரங்கள் இவற்றையெல்லாம் கண்டும் காணாத அரசுத்துறைகள் இவற்றை ஊக்குவிக்க தின மற்றும் வார மாத அணைத்து மொழியிலும் பத்திரிகைகளில் வரும் கடிதங்கள் பல கடிதங்கள் அவர்களாலேயே பிரிண்ட் செய்யப்பட்டவை படிப்பவர்கள் இப்படியெல்லாம் நடக்கிறதா அப்படியாயின் நாமும் செய்வோமே என்ற எண்ணம் மேலோங்கும் அளவுக்கு கடிதங்கள் பிரசுரிக்கப்படுகின்றன தற்போது ஓ டீ டீ இவற்றையெல்லாம் ஒருசேர அனுபவிக்க ஒயோ போன்ற அதிகாரமற்ற விபச்சார விடுதிகள்.. ஒரு வழியாக இது தடைசெய்யப்படுகிறது மக்கள் நல்ல வாழ்க்கை முறையை ஏற்கவேண்டும் அதற்கு அரசு ஒத்துழைக்கவேண்டும் ஆனால் இயலவில்லை ஐ டி வந்தது ஒழுக்கம் ஓடிவிட்டது


தமிழ்வேள்
ஜன 07, 2025 16:15

திருமண பதிவு சான்றிதழ் , திருமண அழைப்பிதழ் , மணமக்கள் இருவரும் தங்கள் பெற்றோருடன் இருக்கும் புகைப்படம் இவற்றில் ஒன்று கூட இல்லை என்றால் ...அது ரூம் போட மட்டும் "கட்டிகிட்ட ஜோடி " அவ்வளவுதான் ...விரட்டி விடலாம் ..


சமீபத்திய செய்தி