மேலும் செய்திகள்
மரியாதையாக ராஜினாமா சித்துவுக்கு எச்சரிக்கை
05-Sep-2024
கொப்பால் : ''முதல்வர் சித்தராமையாவுக்கு ஒழுக்கம் இல்லை,'' என, கங்காவதி எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி காட்டமாக கூறியுள்ளார்.கங்காவதியில் நேற்று அவர் அளித்த பேட்டி:கனிம சுரங்க முறைகேடு வழக்கில் பல்லாரி செல்ல எனக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இன்று பல்லாரி செல்கிறேன். சொந்த ஊருக்கு செல்வதில் மிகவும் மகிழ்ச்சி. எனக்கு அரசியல் மறுபிறவி கொடுத்த கங்காவதி மக்களை என்றுமே மறக்க மாட்டேன்.கனிம சுரங்க வழக்கில் நான் எந்த தவறும் செய்யவில்லை. முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட சித்தராமையா அவரது சுயநலத்திற்காக எங்களுக்கு எதிராக களம் இறங்கினார். ஆனால், இப்போது அவரே ஊழலில் ஈடுபட்டு நிம்மதியை இழந்துள்ளார்.கனிம சுரங்க வழக்கில் என் மீதும், எடியூரப்பா மீதும் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, சித்தராமையா வலியுறுத்தினார். என்னையும், எடியூரப்பாவையும் அத்வானி அழைத்து ராஜினாமா செய்ய சொன்னார். நாங்கள் இருவரும் சந்தோஷமாக ராஜினாமா செய்தோம். ஆனால், இன்று சித்தராமையா பதவி விலக மறுக்கிறார். அவர் பதவியில் இருந்தால் விசாரணை நியாயமாக எப்படி நடக்கும். அவருக்கு ஒழுக்கமே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
05-Sep-2024