உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்தா, ஆயுர்வேத மருந்துகளை தவறாக விளம்பரப்படுத்தினால் நடவடிக்கை

சித்தா, ஆயுர்வேத மருந்துகளை தவறாக விளம்பரப்படுத்தினால் நடவடிக்கை

புதுடில்லி :'சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகள் தீராத நோய்களையும் தீர்க்கும்' என்பது போன்ற விளம்பரங்களை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய ஆயுஷ் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

அபராதம்

இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆயுஷ் அமைச்சகம் எந்த ஒரு சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி நிறுவனங்களின் மருந்துகளுக்கு அங்கீகாரமோ, விற்பனை செய்யும் உரிமமோ வழங்குவதில்லை. மருந்து மற்றும் அழகு சாதன பொருட்களுக்கான சட்டப்படி, விற்பனை அனுமதியை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மட்டுமே வழங்கும்.'ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட மருந்துகள் அற்புதங்களை நிகழ்த்தும், தீர்க்க முடியாத நோய்களையும் தீர்க்கும்' என்பது போன்று விளம்பரங்கள் செய்வது சட்டப்படி குற்றம். இத்தகைய விளம்பரங்கள் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே இது போன்ற விளம்பரங்கள் செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிக்கப்படும்.

விளம்பரம்

சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருந்துகளில், இ1 வகையில் பட்டியலிடப்பட்ட ரசாயனங்கள் கலந்திருந்தால், அந்த மருந்து அட்டைகளில் 'மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் மருந்து எடுத்துக்கொள்க' என குறிக்க வேண்டும். பொது மக்கள் தாங்களாகவே சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருந்துகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருந்துகள் குறித்து மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை பொதுமக்கள் கண்டால் மாநில அரசிடமோ, ஆயுஷ் அமைச்சகத்திடமோ புகார் அளிக்கலாம். தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ராஜமோகன், Tiruppattur
அக் 10, 2024 04:51

இதே விதியை ஆங்கில சிகிச்சைக்கும் வைத்து குணமாக்கும் மருந்துகளையும், சிகிச்சை முறைகளையும் மட்டுமே அங்கீகரிக்க வேண்டும். ஆங்கில மருத்துவர்கள் கேரண்டியுடன் கூடிய சிகிச்சை அளிக்கவேண்டும். தவறினால் நோயாளி தரப்புக்கு நஷ்ட ஈடு தர சட்டம் வேண்டும்.


Dr Vinod Ram
அக் 10, 2024 11:28

உண்மை உண்மை , சரித்திரமும் , பாரம்பரிய மருத்துவமும் நவீன வியாபாரிகளால் மறைக்க படுகின்றன , 140 வருடங்களுக்கு முன்பு , கெமிக்கல் மருந்துகள் வராத காலத்தில் , எல்லோரும் , இந்த இலை செடியை தானேடா மருந்து என்று தின்றீர்கள்


ஆரூர் ரங்
அக் 09, 2024 14:44

ஆனால் CD வாங்கி இடுப்பில் வைத்தால் உடனே குணமாகும் என்று மதமாற்றக் கூட்டத்தில் விற்கிறார்கள். அதற்கு தடை வருமா?


N S Sankaran
அக் 09, 2024 09:24

ஆங்கில மருத்துவ விளம்பரத்திற்கு எந்த கடிவாளமும் கிடையாது. அத்தனையும் அற்புதம, அற்புதம் நம்புங்கள் மக்கட்கூட்டமே


Ramesh
அக் 09, 2024 08:55

நீரிழிவு நோய்க்கு எல்லா மருத்துவர்களும் வரிந்து கட்டிக்கொண்டு மாத்திரை மேல் மாத்திரை கொடுத்து குணமாகும் என்று நம்பிக்கை அளிக்கின்றனர். மருந்து தயாரிப்பாளர்களும் கண்டமேனிக்கு விளம்பரம் செய்கின்றனர். ஆனால் நடப்பது என்னவோ மாத்திரையின் அளவு அதிகமாகிறது. சாகும் வரை மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கிறது. பல பேருக்கும் கை கால்கள் எடுக்கப்படும் நிலை வருகிறது. இது தான் ஆங்கில மருத்துவத்தின் பலன்.


ஆரூர் ரங்
அக் 09, 2024 14:41

எந்த நவீன மருத்துவரும் சர்க்கரை நோய் குணமாகும் எனக் கூறுவதில்லை. சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க மட்டுமே மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் இல்லாவிட்டால் எந்த மருத்துவ முறையும் பலனளிக்காது.


Kasimani Baskaran
அக் 09, 2024 05:32

தார்மீக ரீதியாக தவறான விளம்பரம் கொடுப்பது தவறு என்றாலும் மேற்கத்திய வைத்தியத்தில் அளவில்லாமல் அடிக்கும் கொள்ளைக்கு எல்லையே இல்லாமல் இருக்கிறதே அதை யார் கவனிப்பது?


சமீபத்திய செய்தி