உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேகதாது திட்டத்திற்கு அனுமதி; மத்திய அரசுக்கு சித்து கோரிக்கை

மேகதாது திட்டத்திற்கு அனுமதி; மத்திய அரசுக்கு சித்து கோரிக்கை

பெங்களூரு : 'மேகதாது அணை திட்டத்திற்கு விரைவில் அனுமதி கொடுக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, முதல்வர் சித்தராமையா கோரிக்கை வைத்துள்ளார்.தன்னுடைய 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் முதல்வர் சித்தராமையாவின் பதிவு:அடுத்த ஆண்டு 15வது நிதி ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அந்த ஆணையத்தால் நம் மாநிலத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட 5,495 கோடி ரூபாய்; சிறப்பு நிதி 6,000 கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.இதற்கு முன்பும் நிதி ஆணையங்களால் பரிந்துரைக்கப்பட்ட நிதியும் சரியாக விடுவிக்கப்படவில்லை. ஏற்கனவே 3,300 கோடி ரூபாய் நிலுவை தொகை உள்ளது.மத்திய அரசு வசூலிக்கும் செஸ் வரியை மாநிலங்களுக்கு சரியாக பகிர்ந்து அளிப்பது இல்லை. இதனால் நமது மாநிலத்திற்கு வரி பங்கு குறைந்துள்ளது. செஸ் வரிக்கு பதிலாக சரக்கு மற்றும் சேவை வரியை கூடுதலாக வசூலிக்க அனுமதிக்கவேண்டும்.

மருத்துவ சேவை

மூலதன செலவினங்களுக்காக சிறப்பு உதவி வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால் வரி வினியோகத்தில்கர்நாடகா நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறது.சிறப்பு நிதி திட்டத்திற்கான அளவுகோல்களில் மாற்றம் வேண்டும். ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ், கர்நாடகாவில் 60 சதவீத குடும்பங்களுக்கு மட்டுமே மத்திய அரசு மருத்துவ சேவை வழங்குகிறது.மீதமுள்ள குடும்பங்கள் பொறுப்பை மாநில அரசு ஏற்கிறது. இந்த விதிமுறைகளை மாற்றி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அனைவருக்கும் சுகாதார திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

வரப்பிரசாதம்

அங்கன்வாடி, மதிய உணவு திட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் கவுரவ சம்பளத்தில் மத்திய அரசு தனது பங்கை உயர்த்த வேண்டும். பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் மானியத்தை குறைந்தபட்சம் ஐந்துலட்சமாக அதிகரிக்க வேண்டும்.2023ம் ஆண்டில் கர்நாடகாவின் 223 தாலுகாக்கள் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டன.இதற்காக 18,171 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டா லும், 3,454 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட் டது.தேசிய பேரிடர், மாநில பேரிடர் நிவாரண நிதியில் கர்நாடகாவுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது.

சிறப்பு மானியம்

கலசா பண்டூரி குடிநீர் திட்டத்திற்காக மத்திய அரசிடம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும்.பத்ரா மேலணை திட்டம் தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டால் 4 மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மேகதாது அணை திட்டம், பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்கவும், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும்.மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளை பாதுகாக்கவும்,மலைநாடு மாவட்டங்களின் விரிவான வளர்ச்சிக்காக 10,000 கோடி ரூபாய் சிறப்பு மானியத்தை அறிவிக்க வேண்டும்.ஹைதராபாத் - கர்நாடகா பகுதி கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்புவசதிகளில் ஏற்றதாழ்வுகளை சந்திக்கிறது. அந்த பகுதியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பட்ஜெட்டில் 5,000 கோடி ரூபாய் அறிவிக்க வேண்டும்.விரிவான குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம், பாலியல் வன்கொடுமை, போக்சோ வழக்குகளை கையாள விரைவு நீதிமன்றம் அமைக்க மத்திய அரசு நிதி உதவி செய்ய வேண்டு்ம்.தேசிய சமூக உதவிதிட்டத்தின் கீழ் கர்நாடகாவில் 50 சதவீதம் பயனாளிகளுக்கு மத்திய அரசு ஓய்வுதியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rajan A
பிப் 01, 2025 08:12

எல்லாம் மத்திய அரசு செய்ய வேண்டியது, அரசையும் மத்திய அரசிடம் கொடுக்க வேண்டியதுதானே? டிராமய்யா .


சமீபத்திய செய்தி