உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீக்கியர் படுகொலையில் காங்கிரசுக்கு சிக்கல்! மூத்த தலைவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது கோர்ட்

சீக்கியர் படுகொலையில் காங்கிரசுக்கு சிக்கல்! மூத்த தலைவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சீக்கியர் படுகொலை சம்பவத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது டில்லி கோர்ட் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலையை தொடர்ந்து, 1984ம் ஆண்டு டில்லியில் நிகழ்ந்த சீக்கியர் படுகொலை மற்றும் கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர், கமல்நாத் உள்ளிட்ட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.இந்த சம்பவத்தில் ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றம் சுமத்துவதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளதாகவும், குற்றச்சாட்டை பதிவு செய்யுமாறும் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு உள்ளிட்ட பிற குற்றச்சாட்டுகளை டில்லி ஐகோர்ட் இன்று பதிவு செய்துள்ளது. வரும் 3ம் தேதி முதல் இந்த வழக்கில் கோர்ட் விசாரணை தொடங்குகிறது.இந்த வழக்கில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்ற போது அங்கு வந்த ஜெகதீஷ் டைட்லர் அதை தூண்டிவிட்டார் என்பது சி.பி.ஐ.,யின் குற்றச்சாட்டாகும். கலவரத்தை விசாரித்த நானாவதி கமிஷன் அறிக்கையிலும் டைட்லரின் பெயர் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

GMM
செப் 14, 2024 08:08

40 ஆண்டுகளுக்கு பின் குற்றச்சாட்டு பதிவு. இனி விசாரணை, தீர்ப்பு தண்டனை அல்லது விடுதலை . நாட்டின் ஜனாதிபதி நீதிமன்ற ஒத்திவைப்பு கலாச்சாரம் பற்றி தன் கருத்தை தெரிவித்தார்கள். இது வரை ஜனாதிபதிக்கு நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் தனது இயலாமை பற்றி வருத்தம் தெரிவிக்கவில்லை. ? சுதந்திரம் கொடுத்த பிரிட்டிஷ் அரசியல் சாசனத்தை மட்டும் நீதிபதிகளிடம் கொடுத்து சென்று விட்டனர் ? அரசியல் பாதிப்பிற்கு அஞ்சி மத்திய அரசு சீர்த்திருத்த நடவடிக்கையை தாமத படுத்துவது சிக்கலை உருவாக்கும்.


Balaji
செப் 14, 2024 05:48

பாவம் ராகுல் காந்தி ஆலோசகருக்கு வந்த கஷ்டம்


sankaranarayanan
செப் 13, 2024 20:09

அயல்நாட்டில் சீக்கியர்களுக்கு ஆதரவாக பேசும் பப்பு அவர் பாட்டி செய்த கொடுமைகளைப்பற்றி தெரியுமா தெரியாதா பாராளுமன்றத்தில் பேச வேண்டிய விஷயங்களை அயல்நாட்டில் பேசி என்ன பயன். நாற்பது வருஷங்களாக இந்த வழக்கு இழுத்தடித்து இப்போதுதான் தீர்ப்பு வருதா இது என்ன நீதி மன்றமா


M Ramachandran
செப் 13, 2024 19:37

பாவம் சோனியா குடும்பத்தால் புளுகு மூட்டையர்கள் நிறைந்த காங்கரஸ் கட்சி தலைவர் ஜால்ரா மல்லிகார்ஜுன கார்கேவிற்கு தலை குனிவு. அமெரிக்காவில் நம் நாட்டிற்கெதிராக சென்ற இடமெல்லாம் ரீல் விட்டு கொண்டும் அரைகுறை வேக்காட்டு தனமாக பேசி அங்கு இருந்த பத்திரிக்கையாளர்களால் மூக்கறு பட்டு ஓடி வந்திருக்கும் சீன கால் வருடிகளாலும் காங்கிரஸிக்கு பெரிய தலை குனிவு.


Barakat Ali
செப் 13, 2024 19:18

வேடிக்கையான ஜனநாயக அமைப்பு ... அதைவிட வேடிக்கையான சட்டம் .... அதையும் விட வேடிக்கையான நீதிமன்றங்கள் ....


Sathyanarayanan Sathyasekaren
செப் 13, 2024 18:40

சீக்கியர்களுக்காக பொங்கும், பலர், நீதிமன்றங்கள், இந்திரா கான் போலி காந்தியால் அநியாயமாக பாராளுமன்றம் முன் நிராயுதபாணியாக போராடிய சாதுக்கள் கொல்லப்பட்ட விஷயத்தை பற்றி ஏன் பேசுவது இல்லை? கான் ஸ்கேம் காங்கிரஸ் ஹிந்துக்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை, பாவங்களை, மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டிய கடமை ஹிந்து இயக்கங்களுக்கு உள்ளது.


Palanisamy T
செப் 14, 2024 04:23

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அன்று போரின் போது இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப் படு கொலையை மறந்து போட்டீர்கள் போல் தெரிகின்றது. அப்போது தமிழகத்தில் யார் முதல்வரென்று எல்லோருக்கும் தெரியுமே? இதையும் பட்டியலில் சேர்த்திருக்கலாமே


Sri
செப் 13, 2024 18:02

உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தடை செய்யும்


Natesan B
செப் 13, 2024 17:41

after 40 years what a law?


வாய்மையே வெல்லும்
செப் 13, 2024 17:36

ராவுளின் நாவில் சனீஸ்வர பகவான் ஓவர் டைம் வேலை செய்யுற மாதிரி எனக்கு மட்டும் தான் தோணுதா.??. புஹாஹாஹாஹா கெடுவான் கெடுநினைப்பான் என முன்னோர் வாக்கு சரியே


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 13, 2024 17:35

1984-ல் நடந்த படுகொலைக்கு 2024-ல் 40 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றச்சாட்டு பதிவு இந்தியாவில் நீதிமன்றங்கள் எவ்வளவு விரைவாக செயல்படுகின்றன என்பதற்கு நல்ல உதாரணம். இது நடக்கும் என்று தெரிந்தே காங்கிரஸ் பப்பு அமெரிக்காவில் சீக்கியர்களை இந்தியாவிற்கு எதிராக தூண்டிவிட்டு பேசியது. காங்கிரஸின் தவறை மறைக்க பிஜேபி மீது திசைதிருப்பும் நடவடிக்கை. திமுகவுடன் கூட்டணி வைத்ததின் பலன், எப்படி மக்களை திசைதிருப்பி ஏமாற்றுவது என்று காங்கிரஸ் நன்கு கற்றுக் கொண்டுள்ளது.


முக்கிய வீடியோ