உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உள்நாட்டில் மவுனம்; வெளிநாட்டில் தனிப்பட்ட விஷயம்: ராகுல் விமர்சனம்

உள்நாட்டில் மவுனம்; வெளிநாட்டில் தனிப்பட்ட விஷயம்: ராகுல் விமர்சனம்

புதுடில்லி: '' பிரதமர் மோடி , உள்நாட்டில் கேள்விகளுக்கு மவுனம் காக்கிறார். வெளிநாட்டில் தனிப்பட்ட விஷயம் என்கிறார்,'' லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த பிறகு பிரதமர் மோடியிடம், ' இந்த சந்திப்பில் அதானி விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதா' எனக் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ' இந்தியா ஜனநாயக நாடு. நமது கலாசாரம், 'வசுதேவ குடும்பகம்'. நாம், ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே குடும்பமாக பார்க்கிறோம். இரண்டு நாடுகளின் முக்கிய தலைவர்கள், தனிநபர் விஷயங்கள் குறித்து விவாதிக்க மாட்டார்கள்' என்றார்.இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: உள்நாட்டில் கேள்விகளுக்கு மவுனம். வெளிநாட்டில் தனிப்பட்ட விஷயம். அமெரிக்காவிலும் கூட, ஊழல் குற்றச்சாட்டில் இருந்து அதானியை பிரதமர் மோடி பாதுகாத்து உள்ளார். பிரதமரை பொறுத்தவரை, நண்பரின் பைகளை நிரப்புவதே தேசத்தை கட்டமைப்பது. தேசத்தின் சொத்துகளை வசதியாக திருடுவது தனிப்பட்ட விஷயம் என்கிறார். இவ்வாறு ராகுல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
பிப் 14, 2025 21:18

பப்பு கூறியது உண்மையென்றால் அவர் பிரதமரானால் அதானியின் பாக்கெட்டில் இருப்பார் .....


Ramesh Sargam
பிப் 14, 2025 21:07

ராகுலின் இன்றைய உளறல் படிப்பதற்கு இனிதாக இருந்தது. நாளை மீண்டும் கேட்போம் ராகுலின் நாளைய உளறலை.


Amruta Putran
பிப் 14, 2025 19:30

Pappu is a ChilraPaya


V வைகுண்டேஸ்வரன்,Chennai
பிப் 14, 2025 19:00

பப்பு உங்க அம்மா கிட்ட கேளுங்க ஒட்டாவா quotrocchi bofors scam, national herald....


krishnamurthy
பிப் 14, 2025 17:54

வெட்டி பேச்சு


vijai hindu
பிப் 14, 2025 17:13

முதல்ல வெளிநாட்டில போய் இந்தியாவைப் பத்தி பேசாதீங்க ராகுல்


புதிய வீடியோ