உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்

இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்

இந்தியாவுடன் போரில் ஈடுபட பாகிஸ்தான் மக்கள் இடையே, போதிய ஆதரவு இல்லை. இஸ்லாமாபாத் லால் மசூதியின் சர்ச்சைக்குரிய மதகுரு மவுலானா அப்துல் அஜிஸ் காஜி, 'இந்தியாவுடன் போர் நடந்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பீர்களா?' என்று மக்களிடம் கேட்டபோது, மவுனமே பதிலாக கிடைத்தது.'எல்லா நாடுகளுக்கும் ஒரு ராணுவம் உண்டு. ஆனால், பாகிஸ்தான் ராணுவத்துக்கு, ஒரு நாடே இருக்கிறது' என சர்வதேச அளவில் ஒரு நகைச்சுவை உண்டு. அதை மெய்ப்பிக்கும் விதத்தில், பாகிஸ்தான் ராணுவம், நாட்டின் ஆட்சி அதிகாரம், நீதிமன்ற நிர்வாகம், ஐ.எஸ்.ஐ., எனும் உளவு அமைப்பு ஆகியவற்றை கையில் வைத்துள்ளது. சர்வ வல்லமை பெற்றவராக இருக்கும் ராணுவ தளபதி அசிம் முனீர் எனும் முல்லா முனீர், பாகிஸ்தானை, 'பாகிஸ்தான் எமிரேட்' எனும், பழமைவாத மதவாத நாடாக மாற்ற திட்டமிட்டுள்ளார். இதற்காகவே இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக போருக்கு புறப்பட்டுள்ளது பாகிஸ்தான்.

மதகுரு எதிர்ப்பு

இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளை அனுப்பி அப்பாவி மக்கள் 26 பேரை சுட்டுக்கொன்றதில், பாக்., ராணுவத்தின் பங்கு வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்தியாவுடன் போரிட்டால், அங்குள்ள மத குருக்களும், மக்களும் ஆதரவு தருவார்கள் என அசிம் முனீர் கருதுகிறார். ஆனால், மத தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களும் போரை ஆதரிக்கவில்லை. பயங்கரவாத தலைவர்கள் சிலர் மட்டுமே, பாக்., ராணுவத்தின் செயலுக்கு பக்கவாத்தியம் வாசித்து வருகின்றனர்.இந்தியாவுடனான போரை பாகிஸ்தான் மக்கள் ஆதரிக்கிறார்களா, எதிர்க்கிறார்களா என்பதை வெளிப்படுத்தும் ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இஸ்லாமாபாத் லால் மசூதியின் மதகுரு மவுலானா அப்துல் அஜிஸ் காஜி. இவர், 'இந்தியாவுடன் போர் நடந்தால், எங்களோடு (பாகிஸ்தானுடன்) நிற்பீர்களா?' என்று, அங்கிருந்த மக்களிடம் கேட்டார். ஆனால், மக்கள் இடையே எதிர்பாராத அமைதி காணப்பட்டது. யாரும் போரை ஆதரித்து கையை துாக்கவில்லை.

மோசமான நிர்வாகம்

பொறுமை இழந்த அந்த மதகுரு, ''உங்களிடம், எனக்கு ஒரு கேள்வி உள்ளது... சொல்லுங்கள். இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தான் போராடினால், உங்களில் எத்தனை பேர் பாகிஸ்தானை ஆதரித்து போராடுவீர்கள்?'' என மீண்டும் கேட்டார். ஆனால், யாரும் பதில் கூறவில்லை.இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அப்துல் அஜிஸ் காஜி, ''பரவாயில்லை. உங்களிடம் போதுமான புரிதல் உள்ளது,'' என கூறிவிட்டு, பாக்., அரசையும், ராணுவத்தையும் பொரிந்து தள்ளினார்.''இன்று பாகிஸ்தானில், நிர்வாகம் மிகவும் மோசமாக உள்ளது. அவநம்பிக்கை தான் நீடிக்கிறது.- ஒரு கொடூரமான, பயனற்ற நிர்வாக கட்டமைப்பு உள்ளது. இதற்கு இந்தியா கூட பரவாயில்லை. பலுசிஸ்தானில் என்ன நடக்கிறது? கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் என்ன நடக்கிறது? மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நடக்கின்றன. பாகிஸ்தான் தனது சொந்த குடிமக்கள் மீதே குண்டு வீசுகிறது. பலர் கொல்லப்பட்டுள்ளனர்,'' என, கோபத்தை கொட்டினார் மவுலானா.

மாறும் நிலைப்பாடு

இஸ்லாமாபாத் லால் மசூதி என்பது பழமைவாத மற்றும் பயங்கரவாத கருத்துக்களுக்கு உறைவிடமாக இருக்கும். மதகுருமார்கள் பலரும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களையே கூறி வந்தனர். ஆனால், தற்போது, பாகிஸ்தானில் நிலைமை மாறியுள்ளது. இது பாகிஸ்தான் ராணுவத்தின் எதேச்சதிகார நடவடிக்கையை மக்களும், மத பண்டிதர்களும் ஆதரிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. இந்தியா மீதான, பாக்., மக்களின் எண்ணமும் மாறி வருகிறது. --நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

E. Mariappan
மே 11, 2025 08:05

பாகிஸ்தான் நாடு அழியும் நேரம் வந்துவிட்டது. இந்தியா அதை செய்யும்


மூர்க்கன்
மே 11, 2025 06:18

சற்றே சிந்தியுங்கள் முற்போக்கு நிறைந்த மத மோதல்கள் இல்லாத கேரளாவும் தமிழ் நாடும் வளரும்போது பிற்போக்கான மதத்தை கொண்டாடும் பிஹார் உத்திரபிரதேசம் வளரவில்லை ஒத்துகிட மனசில்லனாலும் இதுதானே நிஜம்.. இதேதான் அந்த முழு தேசத்திலும். மத போதை தெளிந்தால் உயர்வு பெறுவார்கள்.. இல்லையெனில் வீழ்வார்கள் இங்கேயும் தமிழ் வேள் போதை கூட்டத்தை தமிழ் வாள் கொண்டு முறியடிப்பார்கள் எம்மக்கள் . வாழ்க பாரதம்.


DHANASEKARAN DEVAN
மே 14, 2025 06:05

ஒரு காலத்தில் உலகின் மிக அதிக நாணய மதிப்பு கொண்ட நாடாக இருந்த நமது பிரதேசம் இன்று ஒப்பீட்டளவில் அதைவிட குறைந்ததற்கு எப்படி இன்றைய ஆட்சியாளர்கள் காரணமோ இதை விட மோசமான ஆட்சியாளர்களே அங்கைய தாழ்விற்கும் காரணம். ஒப்புக்கொள்ள மனமில்லா விட்டாலும் இதுதான் நிதர்சனம்


THIRUPATHI RAMASAMY
மே 10, 2025 14:24

பாகிஸ்தான் மக்களுக்கு சாப்பாடு தான் வேண்டும் சண்டை வேண்டாம்.


Mecca Shivan
மே 08, 2025 17:53

மீண்டும் ஹிந்து மதத்திற்கு திரும்பும் இஸ்லாமியர்களை வைத்து பாகிஸ்தானின் பெரும்பகுதி , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட இந்தியாவுடன் இணைக்க இந்தியா விருப்பம் தெரிவிக்கவேண்டும் ..


மூர்க்கன்
மே 11, 2025 21:58

மெக்காவில் சிவன் கோவில் கட்டும்போது நடக்கலாம்.. அத்தைக்கு மீசை ??


S.jayaram
மே 08, 2025 14:50

ஆம் அவர்களும் நினைப்பார்கள் இல்லையா நம்முடன் சுதந்திரம் வாங்கிய நாடு ஆனால் இன்று அண்ணாந்து பார்க்கும் வளர்ச்சி கண்டுள்ளது பல்வேறு துறைகளில், பல்வேறு மதங்கள், ஜாதிகள், இனங்கள், மொழிகள் உடைய மதசார்பறற நாடு இவ்வாறு முன்னேறுகிறது என்றால் அமைதி நிலவும் அந்நாடு என்னாட்டையும் சார்ந்து இல்லை, மதாட்சிநடக்கும்னாடு, ஒரே மதம் ஒரே மொழி என்று உள்ள நாம் சிகிச்சைக்கு கூட இந்தியா செல்ல வேண்டி உள்ளது ஏன் இன்னிலமை, ஊழல், கலவரம், பொருளாதார வீழ்ச்சி , தீவிர வாதிகளை ஆதரிப்பது ,போன்றவை


நிக்கோல்தாம்சன்
மே 07, 2025 21:20

பாகிஸ்தான் இவ்வளவு காலம் செய்து வந்ததை இந்தியாவில் சில மாநிலங்கள் இப்போது செய்து வருகிறது , இதுவும் எனக்கு வேதனையளிக்கிறது , மக்கள் அதனை உணர்ந்து அந்த காட்சிகளை விலக்கி வைப்பார்களா


M S RAGHUNATHAN
மே 07, 2025 18:16

அந்த மெளலானா தமிழ்நாட்டில் கேட்டு இருந்தால் அவர் எதிர்பார்த்த பதில் கிடைத்து இருக்கும். திமுக மற்றும் அதன் அல்லக்கைகளான காங்கிரஸ், வி சி க, கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம் கட்சிகள் ஜால்ரா அருணன், நக்கீரன் கோபால் போன்ற உத்தமர்கள் பாகிஸ்தானுக்கு போராட தயாராக இருப்பதாக கை உயர்த்தி இருப்பார்கள்.


Ramesh Sargam
மே 07, 2025 13:28

எந்த நாட்டு மத குரு கையில் துப்பாக்கி போன்ற ஆயுதம் இருக்கும்? இவர் மதம் பிடித்த குரு.


ponssasi
மே 07, 2025 12:06

பாகிஸ்தானில் உழைக்கும் வர்க்கத்தினர் யாரும் போரை விரும்பவில்லை, அவர்கள் விருப்பமெல்லாம் மற்ற நாடுகளை போல நாமும் இந்தியாவுடன் இணைத்து முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டும் நம் தலைமுறையினர் வளமாக வாழவேண்டும் என்பதே. வெளிநாட்டு நிதியில் வாழும் ஒரு கூட்டம் தான் இந்தியாவிற்கு எதிராக விஷமத்தை கக்கிக்கொண்டிருக்கிறது.


Haja Kuthubdeen
மே 07, 2025 10:10

இந்தியாவின் வளர்ச்சியும்.. உலகநாடுகளில் அதற்குள்ள மதிப்பையும் பாக்.அரசாலும் தீவிரவாதிகளாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நல்ல வேலை பாக் பொது மக்களும் மத குருமார்களும் பாக் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. ஆக இது ஹிந்து முஸ்லிம் பகையல்ல. இந்திய தேசத்தின் மீது பாக். ஆட்சியாளர்களின் பொறாமையே. ஜெய் ஹிந்த்.. இந்திய முஸ்லிம்கள் என்றும் நம்தாய் திருநாட்டையே விரும்பனும்.. விரும்புவார்கள்.


கல்யாணராமன் சு.
மே 07, 2025 17:25

ரொம்ப கரெக்ட் ... இதை எப்பவுமே இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினைனுதான் சொல்லணும் . ... ஹிந்து - முஸ்லீம் பிரச்சனைனு பாகிஸ்தான்காரங்க சொல்ற மாதிரி சொல்லக்கூடாது ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை