வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இன்னும் யார் யார் எங்கெல்லாம் புயலை கிளப்ப போகிறார்கள் என்று தெரியவில்லை
சென்னை: 'ரீமா கல்லிங்கல் போதை பார்ட்டிகளை தொடர்ந்து நடத்தினார். அவரது கேரியர் பாதிக்கப்பட்டதற்கு, அவர் நடத்திய பார்ட்டிகளே காரணம்' என ஆங்கில செய்தி சேனலுக்கு பாடகி சுசித்ரா அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய புயலை கிளப்பி விட்டுள்ளது. நடிகைகள் பட வாய்ப்புக்காக, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல புகார்களை விசாரித்து, அதில் உண்மை இருக்கிறது என ஹேமா கமிட்டி அறிக்கை கூறியுள்ளது. இப்படி ஒரு விசாரணை கமிஷன் அமைப்பதற்கு நடிகைகள் ரேவதி, மஞ்சு வாரியர், பார்வதி, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட சில முன்னணி நடிகைகள் ஒன்றாக இணைந்து உருவாக்கிய சினிமா பெண்கள் நல அமைப்பும் (WCC) ஒரு முக்கிய காரணம். கேரியர் டேமேஜ்
இந்நிலையில், ரீமா கல்லிங்கல் என்ன தவறுகள் செய்தார் என்பது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு, பாடகி சுசித்ரா அளித்த பேட்டி: ரீமா கல்லிங்கல் போதைப்பொருள் பார்ட்டிகளை நடத்தினார். அவரது கேரியர் பாதிக்கப்பட்டதற்கு, அவர் நடத்திய பார்ட்டிகளே காரணம். சில விஷயங்களை ஒரு விருந்தில் பயன்படுத்தக் கூடாது. ரீமா கல்லிங்கல் மற்றும் அவரது அப்போதைய காதலன் ஆஷிக் அபு மீது கொச்சியில் ரெய்டு நடத்தப்பட்டது இல்லையா?சுசித்ரா மேலும் கூறியதாவது: ரீமா வீட்டில் நடந்த பார்ட்டிகளில் எத்தனை ஆண்களும், பெண்களும் போதைப்பொருட்களை பயன்படுத்தினார்கள் தெரியுமா, யாருமே ரீமாவிடம் இந்த கேள்விகளை கேட்பதில்லை. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது பற்றி நீங்கள் பேசலாமா? அவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு என்ன செய்தார்கள். அவர்கள் தான் புதிது புதிதாக டிரக்ஸை கொண்டு வந்தார்கள். ரீமா வீட்டில் நடந்தது என்ன?
ரீமா இத்தகைய விஷயங்களில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அறிந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. அந்த பார்ட்டிகளில் கலந்து கொண்ட பல மலையாள பாடகர்கள், வேதனைப்படும் விஷயங்களை தெரிவித்தனர். அவர்கள் தரும் சாக்லைட்டை நாங்கள் தொட மாட்டோம் என்பார்கள். நடிகர்களே சிலர் இரண்டு லைன் (போதை) நான் அடிக்கவில்லை என்றால் என்னால் நடிக்க முடியாது, செட்டுக்கே வர முடியாது என்பார்கள். இவ்வாறு சுசித்ரா தெரிவித்துள்ளார்.இவ்வாறு பாடகி சுதித்ரா பேசிய வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்த கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை ஏன் நடத்தவில்லை என இணையதளத்தில் கேள்விகள் வந்த வண்ணம் இருக்கிறது.
இன்னும் யார் யார் எங்கெல்லாம் புயலை கிளப்ப போகிறார்கள் என்று தெரியவில்லை