உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொண்ட தேர்தல் கமிஷன், 58 லட்சம் போலி வாக்காளர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.அதே சமயம், 1.36 கோடி வாக்காளர்களின் பெயர்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி விளக்கம் கேட்டுள்ளது. இதில், பெற்றோர் பெயரில் எழுத்துப் பிழை அல்லது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான வயது வித்தியாசம் போன்ற காரணங்கள் அடங்கும். எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் அம்மாநில அரசு மற்றும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தரப்பில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்ஷி, விபுல் பஞ்சோலி அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் ஆஜராகி வாதாடினார்.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, குரூப் பி பிரிவு அதிகாரிகள் பெயரை மைக்ரோ அப்சர்வர்களாக பரிந்துரை செய்வதற்கு தாமதம் ஏற்படுத்தியது ஏன் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், 4 ம் தேதி நாங்கள் உத்தரவு போட்ட நிலையில், 7 ம் தேதி அதிகாலை 12 மணிக்கு இமெயிலில் பெயர் பட்டியலை அனுப்பியது ஏன் என்றார்.மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி,'' குரூப் பி பிரிவு அதிகாரிகளை தேர்தல் கமிஷன் கேட்கவில்லை,'' என்றார்.தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் தவான், வேண்டிய அலுவலர்கள் தொடர்பாக மேற்கு வங்க அரசுக்கு ஐந்து முறை கடிதம் எழுதினோம்,'' என விளக்கம் அளித்தார்.இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, '' தேவையான உத்தரவையோ அல்லது வழிமுறைகளை நாங்கள் பிறப்பிப்போம். ஆனால், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதனை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும்,''எனத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

ராம்கி
பிப் 12, 2026 11:34

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மமதா பானர்ஜி அவர்கள் வங்காள தேசத்தின் அதிபராகவும் நினைத்துக் கொண்டு அந்நாட்டு மக்கள் சட்டத்துக்கு புறம்பாக வங்கதேச மாநிலத்தில் குடியேற அனுபவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் அட்டை போன்ற அனைத்து அரசு ஆவணங்களை பெற முடிந்தது எப்படி? இந்திய இறையாண்மைக்கு எதிராக மாநில முதல்வர் மற்றும் அவரது திருணமுல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற உதவி புரிந்துள்ளனர். அரசின் காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அவர்கள் எதிர்கட்சிகள் பணிபுரிய விடாமல், எதிர்கட்சிகள் மீது வன்முறைகள் செய்ய ஏவிவிட்டு தங்கள் பதவியை தக்கவைத்துக் கொள்ள அரசியல் நாடகம் நடத்துகிறது. மமதாவையும் அவர் தலைமையில் இயங்கும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியையும் உரிய சட்டப்படி விசாரணை செய்து தண்டனை தரவேண்டும்.


A rajamohan
பிப் 11, 2026 13:24

Nonsense. Who said SIR should not be conducted? SIR can be done following procedure and time. Intention of SIR just before the election is only being questioned. SCs statement is wrong and not accep.


GOVINDHARAJAN R
பிப் 11, 2026 10:58

மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் இந்தியாவின் ஜனநாயக சிற்பிகள். அவர்கள் மீண்டும் முதல்வராக வங்க மக்கள் தேர்வு செய்யவேண்டும்.


Azad
பிப் 11, 2026 08:17

மூக்கு அவங்க அறுபடறாங்களோ இல்லையோ இன்னிக்கு நீதிமன்றத்தை எப்படி நீதிபதிகள் நடத்துறாங்க சட்டத்தின்பால் எந்த நீதிபதியும் நடத்தவில்லை நேர்மையானவர்களாக இருந்தால் எஸ் ஐ ஆர் விடுங்க தேர்தல் ஆணையம் குறித்து வந்த வழக்குகளை எண்ணி முடிச்சிருக்காங்க அந்த அவங்க பண்றத்தில் உள்ள ஏதாவது கண்டிச்சு இருக்காங்களா இல்ல கேட்டு இருக்காங்களா இல்ல ஏன்னா நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் உடைய கைக்கூலிகள் நிறைஞ்சிருக்கு சட்டத்தின் பால் தீர்ப்பு சொல்லுங்கடா அண்ணா சாமி வந்து கனவுல சொல்லுச்சு அதுபடி நான் அதிகப்படியான மக்கள் விரும்புறாங்க அப்படின்னு தனக்கு சாதகமா ஓய்வுக்கு அப்புறம் வரக்கூடிய பலனுக்கு தீர்ப்பு சொல்றாங்க இதுதான் நடந்துட்டு இருக்கு இல்லன்னு உங்களால மறக்க முடியுமா அடிப்படை ஆதாரம் மட்டும் குற்றம் சாத்துல இந்த தேர்தல் ஆணையம் சொல்லுது இறந்தவர்கள் இல்லை அதனால் நீக்கிட்டேன்னு சொல்ற இருந்தாலும் உயிரோடு கொண்டு வந்தா நாங்க பதில் சொல்றோம் அந்த நீதிமன்றம் சொல்லுது கொண்டு வந்து விட்டு அப்புறம் அதை நாங்கள் நிறுத்த மாட்டேன்னு சொல்லுது முரண்பாடான தீர்ப்பு சொல்றது யாரு சட்டம் தன் கடமையை செய்யும் யாருக்கு செய்யும் தெரியுமா காசு உள்ளவனுக்கும் மறைமுகமாக பலனை அனுபவிக்கிற உனக்கு தான் செய்யும் சாமானிய மக்களுக்கு இல்ல அது இந்த நாட்டின் எழுதப்படாத விதி நேர்மை உள்ளவங்க எலக்சன் கமிஷன் சொல்றீங்கல்ல அந்த தேர்தல் வெளிப்படையா நடக்குதா முரண்பாடோட எத்தனை மறைமுகமான விஷயம் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன்னு சொன்ன ஏத்துப்பாங்களா அவங்கள குறை சொல்ற அறிகுறியோ தகுதியோ எந்த சாக்கடைக்குமே இல்லை சாக்கடைங்க சரியானவங்களா இருந்தா நான் சாக்கடை இல்லன்னு சொன்னா நேர்மையான முறையில் வெளிப்பட இந்த நாடு சொல்ற சட்டை என்ன சொல்லுதுன்னு சொன்னா வெளிப்படையான தேர்தல் நடக்கணும்னு அதன் அடுத்த தகுதி இருக்கா திறன் இருக்கா


Kannan V
பிப் 10, 2026 11:31

லாயர் அல்ல, மம்தா ஒரு லையர்.


V.Mohan
பிப் 10, 2026 07:58

எவ்வளவுதான் மூக்கறுபட்டாலும், திரும்பத்திரும்ப தப்புகளையே செய்து கொண்டிருக்கும் செல்வி மம்முதா பேகம் பேனர்ஜி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்ரே, ரேவந்த் ரெட்டி, சித்தராமையா, டி.கே.சிவகுமார், மு.க. சுடாலின், உதயநிதி, ரகுபதி, ஆர்.எஸ்.பாரதி, தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி, பிரியங்கா வத்ரா, ப.சிதம்பரம், செல்வபெருந்தகை ஆகியோர் திருந்த வாய்ப்பில்லை. ஏன் என்றால் அவர்கள் வந்த வழி, அவர்கள் ஏற்றுக் கொண்ட தலைமை அப்படி வாய்ப்பில்லை மக்களே


Elayaraja Elayarajanatesan
பிப் 11, 2026 05:26

பார்ப்பனன் நீதிமன்றம் நடுநிலை நீதியை வழங்குமா


M Ramachandran
பிப் 09, 2026 21:33

மம்மு தாவின் அரசியல் வாழ்வு மறையும் சூரியன்.மனிதாபமில்லயா விக்கெட் லேடி.


M Ramachandran
பிப் 09, 2026 21:12

இதை எல்லா மாணிங்க்களும் புரிந்து கொள்ள வேண்டும். திருட்டு தீ மு கா புரிந்து கொள்ளா வேண்டும். எப்பேர் பட்ட அடி. ஓட்டுக்காக கண்ட படி பேசி பெரும்பான்யோரை மனம் புண் படி பேசியதற்கு மனமார மன்னிப்பு கேங்க வேண்டும்.


Iyer
பிப் 09, 2026 19:56

குடும்ப ஊழல் கட்சிகள் எல்லாம் மண்ணை கவ்வும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.- பிஹாரில் லாலு & FAMILY . மஹாராஷ்டிராவில் பவார் & FAMILY. WB ல் மம்தா & FAMILY TN ல் ஸ்டாலின் & FAMILY UP ல் அகிலேஷ் & FAMILY SIR ZINDABAAD


Iyer
பிப் 09, 2026 19:51

WB ல் சுமார் 2 கோடி போலி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படும் என ESTIMATE செய்துள்ளார்கள். அது உண்மையானால் TMC க்கு 50 சீட்டுக்கள் கூட கிடைக்காது. மம்தா பானர்ஜி தன் சொந்த தொகுதியிலேயே தோற்றாலும் ஆச்சர்யம் இல்லை


முக்கிய வீடியோ