உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எஸ்ஐஆர் பணி: தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அவகாசம் நீட்டிப்பு

எஸ்ஐஆர் பணி: தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அவகாசம் நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான அவகாசத்தை, தமிழகம் உட்பட 12 மாநிலங்களுக்கு நீட்டித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை டிச.,14 வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக, வாக்காளர் கணக்கெடுப்பு பணி, மாநிலம் முழுதும் நடந்து வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை, வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதுடன், அதை பூர்த்தி செய்து திரும்ப பெற, வரும் 4ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள, 6.41கோடி வாக்காளர்களில், 6.30 கோடி வாக்காளர்களுக்கு மேல், கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், திரும்ப பெறப்பட்டு, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gsbfzw7f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை இன்று ( டிச.,11) வரை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், தமிழகம், குஜராத், மபி, சத்தீஸ்கர், உபி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் எஸ்ஐஆர் பணிகளை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்க வரும் 14ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் டிச.,19ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

100 சதவீதம்

இதனிடையே தமிழகத்தில் விநியோகம் செய்யப்ப்டட எஸ்ஐஆர் படிவங்கள் 100 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. ஆறு கோடியே 51 லட்சத்து 13 ஆயிரத்து 221 விண்ணப்பப்படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Lavanya
டிச 12, 2025 04:28

அவகாசம் நீட்டிப்பு


K S Sankaranarayanan
டிச 11, 2025 20:01

சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள் மொபைல் எண் voter card உடன் இணைக்கப்படாத நிலையில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. அந்த விண்ணப்பங்கள் நிலை பற்றி இதுவரை எந்த விளக்கமும் தரப்படவிலலை


N S
டிச 11, 2025 20:01

"இதனிடையே தமிழகத்தில் விநியோகம் செய்யப்ப்டட எஸ்ஐஆர் படிவங்கள் 100 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது." பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளைத்தான் விநியோகம் செய்யமுடியும். திரும்பி தந்ததை பதிவேற்றம் செய்யவில்லை. குழப்புகிறார்கள். திராவிட மாடலே பரவாயில்லை.


Skywalker
டிச 11, 2025 19:09

All those DMK guys who claim to fight against vote theft are the biggest vote fraudsters in the nation


அருண், சென்னை
டிச 11, 2025 18:37

எவ்வளவு அவகாசம் கொடுத்தாலும் ஒன்னும் நடக்கப் போவதில்லை... உதரணுத்துக்கு, இங்கு வந்த ஆசிரியை - எங்க தெருவுக்கு வந்தவரிடம் எங்க பெயரே இல்லை அதுவும் ஒரே ஒரு நாள் மதியம் வந்தார், என்னுடைய வார்டு 5, 2ஆம் வார்டுல இருந்தது எப்படி மாரிச்சுன்னு தெரியல, என்னுடைய மகனின் formஐ காணோம் அவர் கொண்டு வந்த மொத்த bunchஐயும் check பண்ணிட்டேன்.....சிறிது நாள் கழித்து... கேட்டா திருப்பி அனுப்பிட்டங்களாம் nontraceable ன்னு அனுப்பிட்டாங்க... மறுபடியும் வரவே இல்லை.. சும்மா சொல்லக்கூடாது திமுக ஆட்கள் சுத்திச்சுத்தி வேலை செய்தார்கள்... நிறைய பேரின் form காணோம்... அவர்கள் மறுபடியும் புதுசா apply பண்ணனுமா... தேர்தல் ஆணையத்திற்கு, மக்களின் வரிப்பணம் எவ்வளவு செலவு.. தேவைதானா? பழைய வாக்காளர் புகைப்படம் வெஸ்ட் தானே... காசுதான் வீண் விரையம்... இவர்களின் செயலால் நஷ்டம்தான்.. பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கவும் இல்லை, கொடுத்த வேலையும் சரிவர செய்யவில்லை... நஷ்டம் வரிப்பணம்...இதையே, ஒரு பகுதியை பாஸ்போர்ட் அலுவலகம் மாதிரி, பாதி தனியாரிடம் கொடுத்து விரைவாக செய்யமுடியம் ...செய்தால் எல்லாம் சரியாக மற்றும் விரைவாக, எளிதாக முடியும்... மறுபடியும் பாருங்க வாக்காளர் புகைப்படம் தேர்தல் ஆணையம் இதே ஆசிரியர்கள் மூலமாகவோ அல்லது தபால்நிலையம் வழியாகவோ அனுப்பும், அது மக்களிடம் சரியாக போய்ச்சேருமா? கேள்விக்குறிதான்...


முக்கிய வீடியோ