உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவகுமார் மீதான வழக்கு பிப்., 12க்கு தள்ளிவைப்பு

சிவகுமார் மீதான வழக்கு பிப்., 12க்கு தள்ளிவைப்பு

பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமார் மீதான, சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணையை, பிப்ரவரி 12ம் தேதிக்கு கர்நாடக உயர்நீதி மன்றம் தள்ளி வைத்தது.கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மாநில தலைவருமான சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில், கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 8 கோடி ரூபாய் ரொக்கமும், கணக்கில் வராத 74 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களும் சிக்கின. இதுதொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், இவ்வழக்கு 2020-ம் ஆண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது.சி.பி.ஐ., விசாரணைக்கு அன்றைய பா.ஜ., அரசில் முதல்வராக இருந்த எடியூரப்பா, அனுமதி அளித்திருந்தார். அதன்பின் சிபி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியது. விசாரணை 90 சதவீதம் முடிந்த நிலையில், சி.பி.ஐ., விசாரணைக்கு அன்றைய அரசு அளித்த அனுமதியை, இன்றைய சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, திரும்ப பெற்றது.சிவகுமார் மீதான வழக்கை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்த போது, அன்றைய அரசு சபாநாயகரிடம் அனுமதி பெறவில்லை. எனவே அனுமதியை ரத்து செய்வதாக, காங்., அரசு கூறியது.இதை பா.ஜ.,வினர் வன்மையாக கண்டித்தனர். இது குறித்து கேள்வியெழுப்பி, சி.பி.ஐ., கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதே போன்று விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலும், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.சி.பி.ஐ., மற்றும் எத்னால் தாக்கல் செய்த மனுக்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சோமசேகர், உமேஷ் அடிகரா அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை பிப்ரவரி 12க்கு தள்ளிவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ