உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாகாலாந்தில் ஆறு மாவட்டங்கள் ‛ஜீரோ வாக்குப்பதிவு

நாகாலாந்தில் ஆறு மாவட்டங்கள் ‛ஜீரோ வாக்குப்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோஹிமா : லோக்சபா தேர்தலில் இன்று நாகாலாந்தில் ஆறு மாவட்டங்களில் எந்த வாக்குகளும் பதிவாகவில்லை. இப்பகுதி வாக்காளர்கள் கிழக்கு நாகாலாந்தை தனி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி, இன்று தேர்தலைபுறக்கணித்து தங்கள் எதிர்ப்பை வெளிப் படுத்தினர்.வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த முதல்வர் நெய்பியு ரியோ தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கிழக்கு பிராந்திய மக்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக சென்று சேர்வதில்லை என்றும், மேற்கு பகுதியில் வசிக்கும் மக்களுடன் ஒப்பிடுகையில், தாங்கள் பின்தங்கி இருப்பதாக பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இந்நிலையில், கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு என்ற அமைப்பின் கீழ், ஆறு மாவட்டங்களின் பழங்குடி அமைப்பினர் மற்றும் முன்னணி இயக்கங்கள் ஒன்றிணைந்து தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர்.இதையடுத்து இன்று நாகாலாந்தில் உள்ள ஒரு லோக்சபா தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. எனினும், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 4 லட்சத்திற்கும் மேற்படட் மக்கள், இந்த தேர்தலை புறக்கணித்தனர். இதன் காரணமாக, இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் யாரும் ஓட்டளிக்கச் செல்லவில்லை. இதனையடுத்து அங்கு ‛ஜீரோ' வாக்குப்பதிவு ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்புசாமி
ஏப் 20, 2024 07:57

மோடியின் நன்றி உங்களுக்கு.


Nagarajan D
ஏப் 19, 2024 22:32

அப்படி என்றால் கோவை மக்கள் எல்லா தேர்தல்களையும் புறக்கணிக்கவேண்டும் என்ன வசதி செய்து கொடுத்திருக்கானுங்க திருட்டு திராவிடத்தானுங்க கோவைக்கு எல்லா திட்டமும் அந்த ஒட்டு கூட போடமுடியாமல் வெட்டியாக இருக்கும் சென்னைக்கு மட்டுமே செய்றானுங்க


ديفيد رافائيل
ஏப் 19, 2024 20:34

சூப்பர் இது தான் மக்கள் சக்தி


Sundhar S
ஏப் 19, 2024 20:52

Really? How கம்? ஒன்று, தேர்தலை நடத்த விட மாட்டார்கள் இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்பார்கள் கேட்டால் ஜனநாயக உரிமை என்பார்கள் இப்பொழுது புதுப் பெயர் மக்கள் சக்தி கண்ராவி


தாமரை மலர்கிறது
ஏப் 19, 2024 20:18

பிஜேபி அங்கு நிற்கவில்லை என்பதற்காக மக்கள் பிற கட்சிகளுக்கு ஓட்டுபோட மறுக்கிறார்கள்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ