உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திறமையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை; பிரதமர் மோடி உறுதி

திறமையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை; பிரதமர் மோடி உறுதி

-நமது நிருபர்-மத்திய அரசின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக 'பிரகதி' எனப்படும் ஆய்வுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நடந்தது. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 'பிரகதி' எனப்படும் ஆய்வுக் கூட்டத்தில் 78 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. சாலைகள், ரயில்வே, எரிசக்தி மற்றும் நிலக்கரி ஆகிய துறைகள் இதில் அடங்கும். இந்தியாவில் உள்ள ஐடிஐ சூழலமைப்பு மற்றும் பிஎம்-சேது திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திறமையை மேம்படுத்துவது எங்களது மிக முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்றாகும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை