உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு விசிட்: பயணிகள் அலறல், பீதி; வீடியோ வைரல்

எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு விசிட்: பயணிகள் அலறல், பீதி; வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜபல்பூர்-மும்பை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் பாம்பு வந்ததை கண்டு, பயணிகள் பயந்து கூச்சலிட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர்.மத்திய பிரதேசம் ஜபல்பூரில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த, எக்ஸ்பிரஸ் ரயிலின் ஜி3 பெட்டியில் பாம்பு ஒன்று வந்தது. பாம்பு தெரிந்ததும், பயணிகள் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர். பின்னர், பாதிக்கப்பட்ட பெட்டி பிரிக்கப்பட்டு, ரயில் ஜபல்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. ரயில் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு நிலைமையை சமாளித்து பயணிகளை காப்பாற்றினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gd6p4614&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: 'இந்த சம்பவம் குறித்து கவனிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்படும். பயணிகளின் பாதுகாப்பே முதன்மையானது. ரயில்வே இது போன்ற விஷயங்களை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது' என்றார். இது குறித்து ரயில்வே அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

SAVARIMUTHU RATHIMAL
செப் 28, 2024 17:15

மும்பை நியூஸ் தமிழ்


sundar
செப் 23, 2024 17:40

நல்ல humor sense இந்த கட்டுரைக்கு தலைப்பு வைத்தவருக்கு


நாகராஜ்
செப் 23, 2024 17:16

ஆடு பாம்பே... விளையாடு பாம்பே.. யரையும் கடிக்காம ஓடு பாம்பே... இந்த வரிகளைப்.பாடினால் பாம்பு ஒன்றும் செய்யாதுன்னு ஒரு பாம்பாட்டி சொல்றாரு.


ramesh
செப் 23, 2024 10:28

தக்காலில் AC பெட்டியில் டிக்கெட் எடுத்து பயணம் செய்து இருக்கிறது .


Kumar Kumzi
செப் 23, 2024 12:32

கட்டுமரத்தின் மறு பிறவியாக இருக்க கூடும்


subramanian
செப் 23, 2024 09:50

கரிப் ரத் எப்படி இருக்கும் என்று நம் நாட்டில் இருக்கும் நம்முடைய சர்ப்ப ராஜா பார்க்க கூடாதா. இருப்பினும் சர்ப்ப ராஜா மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், நேரத்தில் பார்த்து விட்டு செல்லும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


சமீபத்திய செய்தி