உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களின் மனமாற்றம் மிகவும் முக்கியம்: கேரளாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

மக்களின் மனமாற்றம் மிகவும் முக்கியம்: கேரளாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'எல்லாவற்றையும் சட்டம் போட்டு மாற்றிவிட முடியாது. சட்டம் தேவை தான். அதை விட மக்களின் மனமாற்றம் மிகவும் முக்கியம்' என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.கேரள மாநிலம், வைக்கத்தில் ஈ.வெ.ரா., போராட்டம் நடத்திய இடத்தில் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கல்வியில் முன்னேறிய மாநிலம். ஈ.வெ.ரா., நூலகம் அமைக்க உதவிய, கேரளா அரசுக்கு நன்றி. சமூகம், அரசியல், பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறோம்.

முற்போக்கான திட்டங்கள்

நவீன வளர்ச்சியால் பாகுபாடுகளை நீக்க முடியவில்லை. எல்லோருக்கும் எல்லாம் என்று அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் ஆட்சி ரீதியாகவும் செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தை போலவே கேரளாவில் முற்போக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நவீன வளர்ச்சியால் பாகுபாடுகளை நீக்க முடியவில்லை. யாரையும் தாழ்த்தி பார்க்காத சமத்துவ எண்ணம் மக்கள் மனதில் வளர வேண்டும்.

பகுத்தறிவு

எல்லாவற்றையும் சட்டம் போட்டு மாற்றிவிட முடியாது. சட்டம் தேவை தான். அதை விட மக்களின் மனமாற்றம் மிகவும் முக்கியம். பகுத்தறிவு மற்றும் அரசியல் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பாகுபாடுகளுக்கு எதிரான நமது போராட்டத்தை தொடர வேண்டும். முன்பு இருந்ததை விட வேகமாக செயல்பட வேண்டும். நவீன வளர்ச்சியால் பாகுபாடுகளை நீக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.வைக்கப் போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Suresh sridharan
டிச 12, 2024 22:56

யார் போராட்டம் நடத்தியது யார் யாருக்கு வக்காலத்து வாங்குவது நடத்தியவர் இதோ போராட்டம் நடத்தியவர் மன்னத்து பத்மநாபன் இதயூம் தெரிந்து கொள்ளுங்கள்


Jay
டிச 12, 2024 21:19

55 சதவீதம் மக்கள் கேரளாவில் மதம் மாறி இந்து ஓட்டு 45 சதவீதம் தான். அந்த 45 சதவீதத்தையும் மாற சொல்கிறார்களா


T.sthivinayagam
டிச 12, 2024 21:10

மாஹா பெரியவர் பெரியார் அவர்கள் அனைத்து ஹிந்துக்களும் ஆலைய வழிபாடு செய்ய வழி செய்து ஹிந்துக்களின் கடவுளாக திகழ்கிறார்


Jit Onet
டிச 12, 2024 19:43

முதலில் தேவை. இந்த சுடலையான் போன்ற திருடர்களின் அட்டூழியம்


Matt P
டிச 12, 2024 19:32

உண்மை தான்.சட்டத்தால் திமுகவை மாற்ற முடியாது. அவர்கள் மனம் மாறினால் தான் ஊழல் திருட்டு ஒழியும்.


Ramesh Sargam
டிச 12, 2024 19:16

ஆம், தமிழக மக்களுக்கு கண்டிப்பாக மனமாற்றம் தேவை. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் இலவசங்களை வாங்க மறுக்கவேண்டும். அரசியல் கட்சிகளின் போலி வாக்குறுதிகளுக்கு மயங்கி ஏமாறக்கூடாது.


M S RAGHUNATHAN
டிச 12, 2024 17:52

கீழ வெண்மணி சம்பவம் குறித்து EVR சொன்ன முத்துக்களை துணிவு இருந்தால் பதிவிடவும். அதுபற்றி பேசும்போது கம்யூனிஸ்ட்கள் பற்றி சொன்னதையும் பிரசுரிக்கவும். கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் கம்யூனிஸ்ட்கள் இந்த ஆளைப் பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தால் அந்த வார்த்தைகளை பினராயி விஜயன் அவர்களிடம் சொல்லவும்.


M S RAGHUNATHAN
டிச 12, 2024 17:48

வைக்கம் போராட்டம் பற்றி தவறான பரப்புரை இங்கு செய்யப் படுகிறது. வைக்கம் போராட்டம் கோயில் நுழைவு போராட்டம் அல்ல. கோயிலை சுற்றி இருந்த தெருக்களில் ஒரு தெருவில் தாழ்த்தப் பட்டவர் நடமாடக் கூடாது என்று தடை இருந்தது. அதற்கு எதிராக மாதவன் என்பவர் போராட்டம் தொடங்கினார். பின்பு அதில் கேசவ மேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப் என்பவர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள். அதற்கு நாராயண குரு என்னும் மாபெரும் தலைவர் ஆதரவு அளித்தார். இந்த தடை குறித்து காந்தி அவர்களிடம் பேசப் பட்டது. காக்கிநாடா காங்கிரஸ் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அப்போது தான் காங்கிரஸ் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்து ஆட்களை அனுப்பியது. அதில் ஒருவர் EVR. அங்கு போராட்டத்தில் கைது ஆகி சில நாட்கள் சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்துவிட்டார். இதுதான் அவர் பங்கு. தமிழகத்தில் இவர் கோயில் நுழைவு போராட்டத்தில் 1930-40 களில் இவர் பங்கு பெறவில்லை. அப்போது அவர் நீதிக் கட்சியில் இருந்தார். ஆலய நுழைவு போராட்டத்தை ராஜாஜி அவர்களின் வழி காட்டுதல் பேரில் முன்னின்று நடத்தியவர்கள் மதுரையில் வைத்தியநாத ஐயர் மற்றும் முத்துராமலிங்க தேவர். அதுபோல் வேறு இடங்களில் ஆலய பிரவேசம் நடந்தது. பொள்ளாச்சியில் லக்ஷ்மண ஐயர் என்பவர் முன்னின்று நடத்தினார். EVR அவர்களுக்கும் இதற்கும் ஒரு சம்பந்தம் கிடையாது. இது தான் அவர் காட்டிய சமூக நீதி, சமத்துவ நீதி. அவர் கட்சியில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எந்த உயர் பதவியும் தந்தது இல்லை. பொய், புரட்டு சொல்வதில் திராவிட கட்சிகள் பெயர் போனவர்கள்.


M S RAGHUNATHAN
டிச 12, 2024 18:52

இந்த EVR க்கு ஒரு தகுதியும் கிடையாது. நம் பணம் 8 கோடி Waste.


orange தமிழன்
டிச 12, 2024 17:29

கண்டிப்பாக மக்களுக்கு மன மாற்றம் தேவை..... திராவிஷ மாடல் ஆட்சியை அகற்ற......


வீரா
டிச 12, 2024 17:27

இவர் தான் gst officer என்றும், gazetted officer என்றும், ஒன்றிய ஆபீஸர் என்றும், பொது நல சேவகன் என்றும் கூறியவரோ......


சமீபத்திய செய்தி