உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியிருப்பு பகுதியில் நடமாடிய படையப்பா: தொழிலாளர்கள் அச்சம்

குடியிருப்பு பகுதியில் நடமாடிய படையப்பா: தொழிலாளர்கள் அச்சம்

மூணாறு; மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் குடியிருப்புப் பகுதியில் நேற்று காலை 6:00 மணி வரை படையப்பா நடமாடியதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் மிகவும் பிரபலமான படையப்பா ஆண் காட்டு யானை கடந்த ஒரு வாரமாக கன்னிமலை எஸ்டேட் பகுதியில் நடமாடியது. பின் தொழிலாளர்கள் குடியிருப்புகள் அருகில் இருந்த வாழைகளை தின்றதுடன், காய்கறி தோட்டங்களையும் சேதப்படுத்தியது.அந்த யானை நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வாழைகளை தின்றது. காலை 6:00 மணி வரை குடியிருப்பு பகுதியில் நடமாடிய படையப்பா மக்கள் நடமாட துவங்கியதால் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியேறியது.

அச்சம்

அப்பகுதியில் யானை உள்ளதை அறியாமல் நேற்று பொங்கல் என்பதால் அதிகாலை வீட்டின் முன் சிலர் கோலமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது யானை பலமாக பிளிறியதால் அச்சத்தில் வீட்டினுள் ஓடினர். அதன் பிறகு தான் குடியிருப்பு பகுதியில் யானை நின்றதை பெரும்பாலானோர் அறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி