உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமையல் ருசிக்க சில டிப்ஸ்கள்

சமையல் ருசிக்க சில டிப்ஸ்கள்

* எலுமிச்சை பழ ஜூஸ் செய்யும்போது, அதனுடன் சிறிது இஞ்சி சாறு கலந்தால், ஜூஸ் சுவையாக இருக்கும்.* வீட்டில் இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் அல்லது தேன் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.* வடைக்கு உளுந்து ஊற வைக்கும்போது, 1 கிலோ உளுந்துக்கு 100 கிராம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து வடை சுட்டால் அதிக எண்ணெய் குடிக்காது.* ஜவ்வரிசியில் ஏதாவது பலகாரம் செய்து கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் செரிமான பிரச்னைகள் சரியாகும்.* சர்க்கரை, வெல்லப்பாகு செய்யும்போது, பதம் வந்தவுடன் எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டால் பாகு முற்றாது; அழுக்கையும் எடுத்துவிடும்.* கேரட், பட்டாணி, பீட்ரூட், மக்காச்சோளம் ஆகியவற்றை வேக வைக்கும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். அவற்றின் சுவை மாறாமல் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ