உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தந்தையை குத்தி கொன்ற மகன் கைது புத்திமதி கூறிய தந்தையை குத்தி கொன்ற மகன் கைது

தந்தையை குத்தி கொன்ற மகன் கைது புத்திமதி கூறிய தந்தையை குத்தி கொன்ற மகன் கைது

திகளரபாளையா: மது பழக்கத்தை கைவிட்டு, பணிக்குச் செல்லுமாறு கூறிய தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு, திகளரபாளையாவை சேர்ந்தவர் சென்னபசவய்யா, 61. நைஸ் சாலையில் செக்யூரிட்டி அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது மகன் அமித், 21. பணிக்கு செல்லாமல், குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.தினமும் குடிக்கும் மகனுக்கும், தந்தைக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல் நேற்றும் குடித்து விட்டு வந்த மகனுக்கு, தந்தை புத்திமதி சொன்னார். கோபம் அடைந்த அமித், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தையை குத்தினார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், சென்னபசவய்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் உயிரிழந்தார்.தகவல் அறிந்த பைதரஹள்ளி போலீசார், அமித்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Jay
பிப் 18, 2025 12:50

இப்படி பல மக்களுக்கு ஊத்தி கொடுப்பதற்குதான் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட மது ஆலைகளை விடியல் குருப்பு வைத்துள்ளனர். மக்கள் மதி மயங்கி இருந்தால்தான் குடும்பத்தை பற்றியோ மேலிடத்தைப் பற்றியோ கேள்வி கேட்காமல் ஓட்டு போடுவார்கள்.


Raj
பிப் 18, 2025 07:14

போதை தன் கண்ணை மறைத்து தகப்பனையே கொல்லும் அளவிற்கு கொண்டுபோய்விட்டது. போதையை முழுவதுமாக ஒழிக்க எந்த அரசு வருமோ? அதுவரை இது போல சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும்.


Ram Moorthy
பிப் 18, 2025 07:10

முதல் முறையாக விஷ சாராயம் குடித்து வரும் போதே வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருந்தால் இப்போது இவ்வளவு மோசமான விஷயம் நடந்திருக்காது அந்த கொலையாளியை சிறையில் போட்டு சரியான சோறு தண்ணீர் இல்லாமல் சாகடிக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி