உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மரபணு சோதனை நடத்த கோரிய மகன்: தனி உரிமையில் தலையிட கோர்ட் மறுப்பு

மரபணு சோதனை நடத்த கோரிய மகன்: தனி உரிமையில் தலையிட கோர்ட் மறுப்பு

புதுடில்லி,'ஒருவர், தன் தந்தையை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, மற்றொருவரின் தனி உரிமை மற்றும் கண்ணியம் ஆகியவற்றை பறிக்க முடியாது' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த வழக்கு ஒன்றில், நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு மிக முக்கியமான தீர்ப்பை நேற்று வழங்கியது. முறைகேடான உறவின் வாயிலாக பிறந்த நபர் ஒருவர், தன் தந்தை யார் என்று தெரிந்து கொள்வதற்காக மரபணு பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:என் தந்தை யார் என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன். அதற்காக, என் தாயார் குறிப்பிட்ட நபரிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். ஏற்கனவே விசாரணை நீதிமன்றம் கடந்த 2007ல், குறிப்பிட்ட நபரிடம் மரபணு பரிசோதனை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில், அதை 2008ல் கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மகன் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது: தனது தந்தை யார் என்று ஒரு மகன் அறிந்து கொள்வது, அவரது உரிமைதான். அதே நேரத்தில் மற்றொரு நபரின் தனி உரிமை என்பதும், சம்பந்தப்பட்ட நபரின் அடிப்படை உரிமை. இதை இரண்டையும் சமமாக எடை போட வேண்டியுள்ளது. மேலும், இவர் தன் தந்தை என்று சொல்லும் ஒரு நபரிடம் இருந்து மரபணு பரிசோதனையை நடத்த அனுமதிக்க முடியாது. ஏனென்றால், அது அவரது தனி உரிமை சார்ந்த விவகாரம். அதற்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Tetra
பிப் 01, 2025 11:48

இதே உச்ச நீதிமன்றம் என் டி திவாரி என்பவருக்கு தனி மனித உரிமையை வழங்கவில்லையே. ரோஹித் ஷர்மா வழக்கை குறிப்பிடுகிறேன். என் டி திவாரிக்கும் அவர் வீட்டு பணியாளருக்கும் தான் பிறந்ததாக வழக்கு தொடுத்து இதே நீதிமன்றம் மரபணு சோதனைக்கு தீர்ப்பு கொடுத்து அவரும் தன் தந்தை என் டி திவாரி தான் என்று நிரூபித்தாரே. சட்டம் என்ன நீதிபதிக்கு நீதிபதி மாறுமா?


S. Neelakanta Pillai
ஜன 30, 2025 04:41

அறிவியல் படி தான் நாங்கள் பகுத்தறிந்து வாழ்வோம், நம்பிக்கை அடிப்படையில் வாழ்வதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொல்லி இந்து ஆன்மீகத்தை மட்டுமே எதிர்க்கும் நாத்திக கும்பல்கள் இந்த நீதிமன்ற தீர்ப்பை எப்படி பார்க்கிறார்கள். என் தந்தை யார் என்று தெரிந்து கொள்வதில் ஒருவருக்கு இருக்கும் தனி உரிமையை வேறு எந்த ஒரு தனி நபரின் உரிமையுடன் ஒப்பீடு செய்ய முடியவே முடியாது, அப்படித்தானே. அதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பை நாம் நேரடியாக குறை சொல்ல முடியுமா, முடியாது. நம்பிக்கை, அறம், தர்மம், ஒழுக்கம் இவைகள் தான் ஒரு தனி மனித வாழ்வின் வாழ்வியல் தத்துவம். ஒரு பெண் என்பவள் அவளது தனி உரிமையில் நேர்மை, சத்தியம், அறம், தர்மம், ஒழுக்கம் கடைபிடிக்கப்பட்டு இருந்தால் எந்த ஒரு ஆண்மகனும் தன்னுடைய தனி உரிமையை நிரூபிக்க சொல்ல வேண்டிய அவசியம் அங்கே எழாது. அடுத்தவர் மனதில் என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்வதற்கு எனக்கு தனி உரிமை உண்டு என்று வாதிடுபவர்கள் புறப்பட்டால் இந்த விஞ்ஞான, அறிவியல் பூர்வமான வளர்ச்சியில் அது சாத்தியப்படுவதாக இருந்தாலும் நீதிமன்றங்கள் அங்கீகரிக்க முடியாது அல்லவா அது போல தான் இதுவும். லிவிங் டுகெதர் அதாவது திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழுதல் மற்றும் தன் பாலின திருமணங்கள் என்ற மிகப் பெரிய வக்கிரமான ஒரு கலையை முன்னிலைப்படுத்தி தனி உரிமைக்கு அழகு சேர்க்கும் வக்கிர புத்தி காரர்களை உதாரணத்திற்கு கமலஹாசன் போன்ற நபர்களை மக்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளும் அறிவிலிகளை அவர்களின் தனி உரிமையை என்னவென்று சொல்வது. கடவுளை என் கண் முன்னே கொண்டு வந்து காட்டு நான் நம்புகிறேன் என்று சொல்லும் காட்டுமிராண்டிகளை இது போன்ற தனி உரிமை அவர்களுக்கு வலு சேர்க்கிறது அல்லவா இதெல்லாம் வாழ்வியலை புரிந்து கொள்ளாத அற்பர்களின் அறியாமை. நம்பிக்கை என்கின்ற மிகப்பெரிய ஆலமரத்தின் அடியில் இருந்து கொண்டு தான் தனி உரிமையை உரிமை கோர முடியும். நம்பிக்கை என்ற ஆலமரத்தை வெட்டி வீழ்த்தி விட்டு இதுவும் எனது தனி உரிமை தான் என்று சொல்லி வாதிட்டால் அந்த தனி உரிமையின் எல்லை எப்படி இருக்கும் என்று தெரியுமா..... வெட்டுண்ட இடத்திலிருந்து ரத்தம் எவ்வாறு அதன் உரிமையில் உடம்பை விட்டு கட்டுப்பாடில்லாமல் வெளியேற ஆரம்பித்தால் என்னவாகுமோ அதுபோல அவனவன் தனி உரிமையால் அவன் அழிவான்.


Barakat Ali
ஜன 29, 2025 17:08

பதிமூன்று வருடங்களுக்கு முன்பு ரோஹித் சேகர் என்கிற நபர் என் டி திவாரி என்னும் காங்கிரஸ் புள்ளியைத் தனது தந்தை என்று இதே மரபணு சோதனை மூலம் நிரூபித்தார் .... அப்போது அனுமதிக்கப்பட்டது ..... ஒருவேளை கோர்ட்டில் அவரது அரசியல் எதிரிகளுக்குச் செல்வாக்கு இருந்திருக்கலாம் ...


ஆரூர் ரங்
ஜன 29, 2025 10:47

வேறு மாதிரி தீர்ப்பு வந்ததே.


Chanemougam Ramachandirane
ஜன 29, 2025 09:33

இதை தான் தாங்கள் வரும் வசக்கில் 3 வது நபர் தலையீடு உள்ளது என்று அறிந்து செயல்பட்டாலே விரைவில் தீர்ப்பு வழங்கலாம் இதை சொல்ல இவ்வளவு காலம் ஆகிற்று ஒருவர் உரிமையில் தலையிட எவருக்கும் உரிமையில்லை என்பது அடிப்படை அப்படி இருக்கையில் நாட்டில் நடக்கும் வழக்குகள் அதிகம் 3 வது நபர் தலையீட்டினால் அதுவும் அரசுஎன்கிற பெயரில் அதிகங்கள் சேயும் தவறினால் என்பதினை நீதிமன்றம் உணர்ந்து ஒருவர் உரிமையில் 3 வது நபர் தலையீடு இருந்தால் அவர்களை விசாரணை வலையித்திற்குள் கொண்டு வந்து தண்டனை வழங்கினால் தான் பின்னர் தப்பு நடக்கமல் நிர்வாகம் செயல்படனும் . முதலில் அரசும் நீதிமன்றமும் நிர்வாகத்தில் தவறு நடக்காமல் இருப்பதை உறுதி செய்யணும்


Iniyan
ஜன 29, 2025 09:07

பித்துக்குளி ....


sankaran
ஜன 29, 2025 08:52

தாய் ஏன் சொல்ல மறுக்கிறாள் யார் அப்பா என்று...


SANKAR
ஜன 29, 2025 10:09

she is pointing out a certain person as per news.


Kasimani Baskaran
ஜன 29, 2025 07:45

முறையற்ற உறவில் பிள்ளை என்றால் அவர் வாரிசாக முடியாதா? நீதிமன்றம் மகா கோமாளித்தனமாக முடிவு செய்வது போல தெரிகிறது.


Rajathi Rajan
ஜன 29, 2025 11:02

ஏன் உனக்கும் இதே பிரச்சனை இருக்க?


பேசும் தமிழன்
ஜன 29, 2025 07:35

என்னய்யா உங்க தீர்ப்பு.. சோதனை செய்தால் உண்மை அல்லது பொய் என்று தெரிந்து விட போகிறது.. அந்த பிள்ளையின் நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.. எத்தனை பழி பேச்சுக்களுக்கு ஆளாகி இருப்பார்? அந்த பெண் குறிபிட்ட ஒரு நபரை தானே கை காட்டுகிறார்.. நெருப்பிலாமல் புகையாது அல்லவா?


Subramanian
ஜன 29, 2025 06:26

Hope they gave permission in ND Tiwary case some years before?


KRISHNAN R
ஜன 29, 2025 11:22

ஆம்... ஒரு அரசியல்வாதி வழக்கில். இதே உச்ச நீதி மன்றம் சொன்னது


சமீபத்திய செய்தி