உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்றார் சோனியா

ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்றார் சோனியா

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்றுக் கொண்டார்.லோக்சபா எம்.பி.,யாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா உடல்நிலை காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை. ராஜ்யசபாவுக்கு செல்ல முடிவு செய்தார். ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில், சோனியா இன்று( ஏப்.,04) ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.முன்னதாக, சோனியாவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே நேரில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ராகுல், பிரியங்கா, ராபர்ட் வாத்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பேசும் தமிழன்
ஏப் 04, 2024 19:23

ரேபரேலி புட்டு கொண்டு விடும் என்று செய்தி வந்ததால்..... இத்தாலி போலி காந்தி மேடம்... கிரேட் எஸ்கேப்.


சோழநாடன்
ஏப் 04, 2024 18:26

மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்கும் காங்கிரங்ஸ் கட்சியின் மூத்த தலைவர் திருமதி சோனியகாந்தி அவர்களுக்கு நல்வாழ்த்துகள்


Indian
ஏப் 04, 2024 16:07

வாழ்த்துக்கள்


shyamnats
ஏப் 04, 2024 15:56

மக்களை சந்திக்க தைரியமில்லை , குறுக்கு வழியில் எம் பீ இப்பொழுதாவது எந்த ஒரு வேட்பாளரும் இரண்டு தொகுதிகளில் நிற்பதை தேர்தல் கமிஷன் தடை செய்ய வேண்டும் மக்கள் வரிப்பணமும் நேரமும் வீணாவதை தடை செய்ய வேண்டும்


பேசும் தமிழன்
ஏப் 04, 2024 19:26

தேவையில்லாத விஷயத்துக்கு எல்லாம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யும் உச்ச நீதிமன்றம்.... இதற்க்கு வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது ஏன்.... மக்கள் வரிப்பணத்தை வீணாக்க வேண்டும் ???


DUBAI- Kovai Kalyana Raman
ஏப் 04, 2024 15:33

குடும்ப அரசியல் , குடும்ப தலைவிக்கு எம் பி போஸ்ட் மகள் , மருமகன் , மகன்... அப்படியே கொடுத்தா யாரும் எலெக்ஷன் ல நின்னு ஜெயிக்க தேவை


வாய்மையே வெல்லும்
ஏப் 04, 2024 15:28

ராபர்ட் காந்தி இல்லைல்ல ராபர்ட் வாத்ரா விற்கு இங்க என்ன வேலை


Indian
ஏப் 04, 2024 15:22

வாழ்த்துக்கள்


Narayanan
ஏப் 04, 2024 15:12

உடம்பு சரியில்லாததால் தேர்தலில் நிற்கவில்லை சரி நன்று ஏன் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கக்கூடாது ? நிமமதியான வாழ்க்கை வாழலாமே


Bhakt
ஏப் 04, 2024 14:35

குடும்ப நிகழ்ச்சி


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி