புதுடில்லி: நாட்டில் அதிக மழைப் பொழிவை தரக்கூடிய தென்மேற்கு பருவமழை, ராஜஸ்தானின் மேற்கு பகுதியில் இருந்து விலக தொடங்கி உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துஉள்ளது. நடப்பாண்டில், 'எல் நினோ' எனப்படும் கடல் வெப்பநிலை மாறுபாடு காரணமாக, நாடு முழுதும் பருவமழை பற்றாக்குறை 15 சதவீதமாக உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gyypm2a4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாட்டில் தென்மேற்கு பருவமழை, ஜூன் 4ல் கேரளாவில் தொடங்கியது. அதன்பின், ஜூலை 9ல், நாடு முழுதும் பரவலாக மழை பெய்தது. வறண்ட வானிலை வழக்கமாக செப்., 17ல் முடிவடையும் தென்மேற்கு பருவமழை, நடப்பாண்டில் சற்று தாமதமாக நேற்று விலகத் தொடங்கியது. இது குறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு பருவ மழை, ராஜஸ்தானின் ராம் கர், மோகன்கர், பலோடி, கஜூவாலா ஆகிய பகுதிகள் வழியாக விலகத் தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில், பஞ்சாப், குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்தும் பருவமழை விலகி விடும். இதையடுத்து, ஹரியானா, டில்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் படிப்படியாக பருவமழை விலகி, வறண்ட வானிலை நிலவும். எல் நினோ தீவிரமடைந்து வருவதால், நேற்று முன்தினம் நிலவரப்படி, நாட்டின் ஒட்டுமொத்த மழைப்பொழிவு, சராசரியை விட 15 சதவீதம் வரை குறைந்து, 69.5 செ.மீ., அளவு மட்டுமே மழை பதிவாகி உள்ளது. ஜூன், ஆக., செப்., மாதங்களில் பெரும்பாலான இடங்களில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாகவே இருந்தது. நாட்டின் 43 சதவீத பகுதிகள் நடப்பாண்டில் மழை பற்றாக்குறையை சந்தித்து உள்ளன. பாதிப்பு குறிப்பாக, தென் மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, 28 சதவீத பற்றாக்குறையை சந்தித்துள்ளன. இதில், ஆந்திரா 43 சதவீதம், கர்நாடகா 31 சதவீதம், கேரளா 28 சதவீதம், தமிழகம் 22 சதவீதம், தெலுங்கானா 21 சதவீதம் வரை மழை பற்றாக்குறையை சந்தித்து உள்ளன. பருவமழை விலகத் தொடங்கினாலும், அடுத்த சில நாட்களில் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, ஒடிஷா மற்றும் ஆந்திர கடலோரங்களுக்கு இடையே கரையை கடக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'எல் நினோ' என்றால் என்ன?
பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிக வெப்பமடையும் போது, அதன் மேல் உள்ள காற்றின் அழுத்தமும், திசையும் மாறுவது தான், 'எல் நினோ' என அழைக்கப்படுகிறது. இது, உலக நாடுகளின் பருவமழையை தலைகீழாக மாற்றும் ஆற்றல் கொண்டது. மழை பற்றாக்குறைக்கும் இதுவே முக்கிய காரணம். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த எல் நினோ நிகழ்வு, இதுவரை பதிவானவற்றிலேயே மிகத் தீவிரமான ஒன்றாக இருக்கக்கூடும். இதை, 'சூப்பர் எல் நினோ' என, அழைக்கின்றனர்.