உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவனமாக பேசுங்கள் ஸ்டோக்ஸ்: அஷ்வின் பதிலடி

கவனமாக பேசுங்கள் ஸ்டோக்ஸ்: அஷ்வின் பதிலடி

புதுடில்லி; ''எதையும் நன்கு யோசித்து, கவனமாக பேச வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு செயலுக்கும் உடனே எதிர்வினை கிடைத்து விடும்,'' என அஷ்வின் தெரிவித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து மோதிய நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்தது. இதில் கால்விரல் எலும்பு முறிவுடன் பேட்டிங் செய்தார் இந்தியாவின் ரிஷாப் பன்ட். இதுகுறித்து பயிற்சியாளர் காம்பிர் கூறுகையில்,'' டெஸ்டில் காயமடைந்த வீரருக்குப் பதில், மாற்று வீரர் களமிறங்க அனுமதிக்க வேண்டும்,'' என்றார். இதற்கு பதில் தந்த இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், ''காம்பிர் கருத்து முற்றிலும் கேலிக்கு உரியது,'' என்றார். அடுத்து நடந்த ஐந்தாவது டெஸ்டில் தோள்பட்டையில் காயம் அடைந்தார் வோக்ஸ். வேறு வழியில்லாத நிலையில் கையை கட்டிக் கொண்டு, ஒரு கையுடன் பேட்டிங் செய்ய களமிறங்கினார். இதுகுறித்து இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறியது: 'நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதைத் தான் அறுவடை செய்கிறீர்கள்' என்பர். இதுபோல, நீங்கள் செய்த செயலுக்கு உடனே எதிர்வினை கிடைத்து விடும். இது தான் விதி. ஸ்டோக்சின் கிரிக்கெட் திறமைக்கு நான் ரசிகன். ஆனால், அவர், எதையும் யோசித்து, கவனமாக பேச வேண்டும். தனது அணியின் வெற்றிக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருந்தார் வோக்ஸ். அட்கின்சனுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுத்து, அணியை வெற்றி பெறும் நிலைக்கு கொண்டு சென்றார். காயமடைந்த போதும், அணிக்காக களமிறங்கிய, வியக்கத்தக்க போராட்ட குணத்திற்கு வாழ்த்துகள். 'வீரர்கள் காயமடையும் விதியில் மாற்றம் கொண்டு வர வேண்டும்,' என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்தார். இதுபோல மாற்று வீரர்களை அனுமதிக்க வேண்டும். ரிஷாப் போன்ற வீரர் தனது அணிக்காக விளையாடும் போது, காயமடைந்தால் எப்படி இருக்கும் என ஸ்டோக்ஸ் யோசித்து இருக்க வேண்டும். மாற்று வீரர் தேவையில்லை, இது நல்லதல்ல என்றால் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். மாறாக, இதுபோன்ற 'நகைச்சுவை', 'கேலி' என்ற வார்த்தைகளை பயன்படுத்துவது மரியாதைக்கு உரிய செயல் அல்ல. விதி வலியது. எதையும் நன்றாக யோசித்து பேசுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajasekar Jayaraman
ஆக 07, 2025 21:47

இந்துக்கள் நம்பும் எதிர்வினை.


ரங்ஸ்
ஆக 07, 2025 12:01

டீ20 காலத்தில், வீரர்கள் 25 நாட்களாக ஐந்து டெஸ்ட் போட்டிகள் முழு திறமையுடன் விளையாடினார்கள். மெச்ச வேண்டும்.


adalarasan
ஆக 07, 2025 11:58

ஸ்டோக்ஸ் திமிர் பேச்சுஆறுதல் சொல்வார்கள்..இப்பொழுது கேலி கிண்டல் செய்கிறார்கள்..மோசம் ல் எதிர் கட்சியினர் ஓடி வந்து ஆறுதல் கூறுவார். இப்பொழுது ஏளனம் செய்கிறார்கள்.


முருகன்
ஆக 07, 2025 09:17

அவர்கள் தோல்விக்கு காரணம் வோக்ஸ காயம் தான் இல்லை என்றால் அதே கதி தான் ஏதோ இமலாய வெற்றி மாதிரி


மணி
ஆக 07, 2025 08:57

உருப்படியான வேலய பாக்கலாம்


swamy
ஆக 07, 2025 08:44

Fantastic ashvin ji....


subramanian
ஆக 07, 2025 07:47

சரிதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை