உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.எல்.ஏ.,க்களுக்கு டேப் சபாநாயகர் காதர் கைவிரிப்பு

எம்.எல்.ஏ.,க்களுக்கு டேப் சபாநாயகர் காதர் கைவிரிப்பு

பெங்களூரு: அடுத்தாண்டுக்குள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுக்கு அறிக்கைகள், பில்களை படிக்கவும், அமர்வுகளின் போது, முக்கிய தகவல்களை பெற 'டேப்' வழங்கப்படுமா என்ற கேள்விக்கு சபாநாயகர் காதர் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.கர்நாடகாவில் ஒவ்வொரு சட்டசபை கூட்டத்தொடரிலும், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுக்கு அறிக்கைகள், மசோதாக்கள், முக்கிய தகவல்கள் காகிதத்தில் தயார் செய்து வழங்கப்படுகின்றன.இதற்காக ஆண்டு தோறும் 30 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. இதை குறைக்கும் வகையில், 'காகிதமில்லா' கூட்டத்தொடரை நடத்த, அரசு திட்டமிட்டு உள்ளது.அதே வேளையில், நாட்டின் சில மாநிலங்களில் மட்டுமே தேசிய, 'இ - விதான்' செயலி அமலில் உள்ளது. தேசிய இ - விதான் செயலி என்பது, 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், காகிதம் இல்லா மற்றும் சட்டசபை நிகழ்வுகளில் டிஜிட்டல் முறையை பயன்படுத்தும் செயலியாகும்.இது தொடர்பாக, சபாநாயகர் காதர் கூறியதாவது:கர்நாடகாவில் சட்டசபை, மேலவை என இரு அவைகள் உள்ளன. இதன் உறுப்பினர்களுக்கு அறிக்கைகள், மசோதாக்கள், முக்கிய தகவல்கள் படிப்பதற்காக, 'டேப்' எனும் கையடக்க கம்ப்யூட்டர் வழங்குவதால் எந்த பயனும் இல்லை.இந்த திட்டத்தில் சில தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளன.இந்த செயலியை பார்லிமென்டில் கூட பயன்படுத்துவதில்லை. அப்படி இருக்கும் போது, இந்த செயலியால் எந்த பயனும் இருக்காது. அதே வேளையில், தொழில்நுட்ப பிரச்னைகளை சரி செய்ய மூன்று கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.நாங்கள் பல மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறோம். அவைகள் விவாதத்தில் இருக்கும்போது, பொது மக்களின் கருத்துகளை கேட்க முடியாது. கமிட்டியினர் சமர்ப்பிக்கும் அறிக்கையை வைத்து, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.டேப் வழங்குவதற்காக, 'விரிவான திட்ட அறிக்கையை, நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து, அடுத்த ஆறு மாதங்களில் சமர்ப்பிப்பர். 'அதன்பின், டெண்டர் அழைக்கப்பட்டு, அமல்படுத்த ஓராண்டாகிவிடும்' என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை