உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு சபாநாயகர் இறுதிகட்ட ஆலோசனை

சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு சபாநாயகர் இறுதிகட்ட ஆலோசனை

விக்ரம் நகர்:சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான பேனல்களை நிறுவுவது குறித்து சபாநாயகர் விஜேந்தர் குப்தா நேற்று முன்தினம் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தினார்.சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் நாட்டின் முதல் சட்டசபை என்ற பெருமை டில்லிக்கு கிடைக்க வேண்டும் என்ற முனைப்புடன் சபாநாயகர் விஜேந்தர் குப்தா பணியாற்றி வருகிறார்.சட்டசபை கட்டடத்தின் மேல்பகுதியில் சூரிய ஒளி பேனல்களை நிறுவி, 500 கிலோவாட் மின்சாரம் தயாரிக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த சபாநாயகர் ஆர்வம் காட்டுகிறார்.இதற்கான இறுதிகட்ட ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. சபாநாயகர் விஜேந்தர் குப்தா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை, சட்டசபை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதுதொடர்பாக சட்டசபை செயலகம் வெளியிட்ட அறிக்கை:தற்போது 200 கிலோ வாட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை 500 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் கூடுதல் பேனல்கள் பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.சட்டசபை கூரையில் கூடுதல் பேனல்கள் பொருத்த சரியான இடத்தை தேர்வு செய்வது குறித்து ட்ரோன்கள் மூலம் டிஜிட்டல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அனுமதி கடிதம் வழங்கப்பட்ட 60 நாட்களுக்குள் பேனல்கள் பொருத்தும் பணி நிறைவடையும். அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின், சட்டசபையின் முழு மின்தேவையையும் சூரிய ஒளி மின்சாரம் பூர்த்தி செய்யும்.அத்துடன் 10 சதவீத உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ