உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லியில் இன்று வந்தே மாதரம் பாடல் குறித்து சிறப்பு விவாதம்; உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

பார்லியில் இன்று வந்தே மாதரம் பாடல் குறித்து சிறப்பு விவாதம்; உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: பார்லிமென்டில் இன்று (டிசம்பர் 8)வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு நிறைவு குறித்து சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக லோக்சபாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் 14க்கும் மேற்பட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் இரு அவைகளிலும் மசோதா மீதான விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த சூழலில், இன்று வந்தே மாதரம் பாடலின், 150வது ஆண்டு நிறைவு குறித்து சிறப்பு விவாதம் லோக்சபாவில் நடைபெற உள்ளது. அப்போது வந்தே மாதரம் பாடல் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பின்னர், லோக்சபாவில் வந்தே மாதரம் பாடல் தொடர்பான சிறப்பு விவாதத்தின் போது, எம்பிக்கள் தங்களது கருத்துக்களை பேசுவார்கள் என தெரிகிறது. இதனால் இன்று விவாதம் அனல் பறக்கும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RAMESH KUMAR R V
டிச 07, 2025 16:10

நாளை மோடிஜி இந்தியாவின் தேசப்பற்றை அவரோட தேசப்பற்றுடன் பறைசாற்றுவார். ஜெய் ஹிந்த்.


R. SUKUMAR CHEZHIAN
டிச 07, 2025 15:18

நமது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் எழுச்சியும் வீரத்தையும் தந்தது திரு. பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வந்தேமாதரம் என்கிற இந்த பாடல். வந்தேமாதரம் என்று கூறி பலர் தூக்கு மேடை ஏறினர் நமது கொடி காத்த குமரனும் திரு. வாஞ்சிநாதனும் தங்கள் உயிர் போகும் போது கூட வந்தேமாதரம் என முழங்கினார். 1947ல் நடந்த ஆட்சி மாற்றதின் முதல் பிரதமர் நேரு நமக்கு தேசிய கீதமாக வரவேண்டிய வந்தேமாதர பாடலை வரவிடாமல் தடுத்து திரு. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கன மன என்கிற பாடலை தேசிய கீதமாக அறிவித்தார் என்கிறது வரலாறு. பாரதி கூறியது போல வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம். ஜெய் ஹிந்த்.


tamilan
டிச 07, 2025 14:41

ஜெய்ஹிந்த்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை