பேச்சு தடைபடவில்லை!
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக இருப்பதால், சட்டம் - ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பொறுப்பில் இல்லை. அது துணைநிலை கவர்னர் வசம் உள்ளது. பஹல்காம் தாக்குதல் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்த பேச்சை தடுக்கவில்லைஒமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி
முரண்பாடு!
பா.ஜ., அரசு மேடைகளில், 'தன்னிறைவு இந்தியா' என்ற முழக்கத்தை பிரசாரம் செய்கிறது. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்ய ஒப்பந்தங்கள் செய்கிறது. இதனால், நம் பொருளாதாரம் இறக்குமதியை சார்ந்து உள்ளது. உள்ளூர் தொழில்கள் நலிவடைகின்றன.அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதிசிறப்பு அமர்வு தேவை!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளித்தோம். 'பார்லிமென்ட் சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும்' என்ற ராஜ்யசபா எம்.பி., கபில் சிபல் எழுப்பிய கோரிக்கைக்கு ஆதரவளிக்கிறோம். மழைக்கால அமர்வுக்கு முன் ஜூனில் ஒரு சிறப்பு அமர்வு நடத்த வேண்டும்.சகாரிகா கோஸ், ராஜ்யசபா எம்.பி., - திரிணமுல் காங்கிரஸ்