உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து

இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீதான இடைநீக்க நடவடிக்கையை விளையாட்டு அமைச்சகம் ரத்து செய்தது.இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் இருந்தார். இவர் மீது பாலியல் புகார் கூறப்பட, கூட்டமைப்பில் இருந்து ஒதுங்கினார். இவருக்கு நெருக்கமான சஞ்சய் சிங், புதிய தலைவராக தேர்வு செய்யப்பட, சர்ச்சை தொடர்ந்தது. இதையடுத்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் டபிள்யு.எப்.ஐ.,க்கு தடை விதித்தது. மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க உயர் மட்ட கமிட்டியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்தது. தற்காலிக குழுவிற்கு பூபிந்தர் சிங் பஜ்வா தலைமை தாங்கினார். ஹாக்கி ஒலிம்பிக் வீரர் எம்.எம்.சோமயா உள்ளிட்டோர் உறுப்பினராக இருந்தனர்.இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீதான இடைநீக்கத்தை விளையாட்டு அமைச்சகம் ரத்து செய்தது. கூட்டமைப்பின் தேசிய விளையாட்டு கூட்டமைப்பு என்ற அந்தஸ்தையும் மீட்டெடுத்தது. அனைத்து சர்வதேச போட்டிகளும் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K.n. Dhasarathan
மார் 11, 2025 17:58

விளையாட்டு அமைச்சகத்தின் ரத்து நடவடிக்கை ஏன் ? பிரிஜ் பூசன் சிங்க் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? இந்தியா மல்யுத்த சம்மேளனம் என்ன ஆமாம் சாமி கூடாரமா ? அங்கு செயலர்கள் அதிகாரிகள் யாருமே இல்லையா ? விவாதம் செய்யவில்லையா ? எதற்கு இந்த ரத்து நடவடிக்கை? பிரிஜ் பூச ன் மன்னிப்பு கேட்டாரா ? ஏன் வெளிப்படை தன்மை இல்லை ? நினைத்தால் எந்த நடவடிக்கையும் தன்னிச்சையாக எடுக்க முடியுமா ? அமைச்சர் ஏதும் அறிக்கை வெளியிட்டாரா ? நாளை யாரும் வழக்கு போட்டால் யார் பதில் சொல்வார் ?


Petchi Muthu
மார் 11, 2025 15:14

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரிஜ் பூஷன் சிங் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெரியவில்லை