உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விடுதலை புலிகளுக்கு நிதி: ஈ.டி., வளையத்தில் இலங்கை பெண்

விடுதலை புலிகளுக்கு நிதி: ஈ.டி., வளையத்தில் இலங்கை பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, நிதி திரட்ட முயன்ற வழக்கில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணிடம், இரண்டு நாட்கள் ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது. இலங்கையை சேர்ந்தவர் லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, 45. இவர், போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி, சென்னை விமான நிலையத்தில் இருந்து, கர்நாடக மாநிலம், பெங்களூரு செல்ல முயன்றபோது, 2021ல், தமிழக 'கியூ' பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின், அவரது கூட்டாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப் பட்டனர். இவர்களின் பின்னணியில், ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் பதுங்கி இருக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த உமாகாந்தன் இருப்பது தெரிய வந்தது. இதனால், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அவர்களை கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வங்கி கணக்கில் இருந்து, விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவருக்கு, லட்சுமணன் மேரி பிரான்சிகா, 42 கோடி ரூபாய் அனுப்ப முயன்றதும், அதற்கு இவரின் கூட்டாளிகள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. தற்போது, லட்சுமணன் மேரி பிரான்சிகா உள்ளிட்டோரிடம், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், இரண்டு நாட்கள் விசாரிக்க உள்ளனர். இதற்காக நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kulandai kannan
செப் 22, 2025 12:34

சிங்களர்களோடு இணக்கமாக வாழ்த்து வந்த இலங்கை தமிழர்களுக்கு துர்போதனை செய்து, தனி ஈழப் போராட்டம் என்ற பெயரில் தமிழர் வாழ்வை சீரழித்ததே, மிஷனரிகள்தான். ஆன்டன் பாலசிங்கமே அதற்கு உதாரணம்.


Shekar
செப் 22, 2025 09:27

பெயரே வில்லங்கமா இருக்கே?


beindian
செப் 22, 2025 09:47

அதென்ன....


சூரியா
செப் 22, 2025 06:33

இலங்கை, மலேசியத் தமிழர்களுக்கு 420 வேலையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.


Kasimani Baskaran
செப் 22, 2025 03:50

இருக்க இடம் கொடுத்தால் நாட்டையே குட்டிச்சுராக்கி குண்டு வைத்து...


Senthoora
செப் 22, 2025 07:24

வெளிநாடுகளில் பலகோடி இலங்கை தமிழர் இருக்கிறாங்க, குண்டுவைத்தா வாழுறாங்க, ராஜிவ் காந்தி குண்டுவெடிப்புக்கு இந்திய சாமிகள் காரணம், இப்போ விடுதலை புலி என்று உரிமைகோர யாரும் இல்லை, இந்த பெண் ஒரு இயக்க பெயரை வைத்து மக்களை ஏமாற்றுகிறார். இவள் சொன்ன நபரை இலங்கை புலனாய்வுக்கு கொடுத்தால், இப்போ இலங்கை அரசு அவரை கைது செய்து இலங்கை கொண்டுவரமுடியும், இப்போ இலங்கை அரசு பலரை வெளிநாடுகளில் கைது செய்து இலங்கைக்கு கொண்டுவருது,


முக்கிய வீடியோ