உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்ரீசக்தி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஸ்ரீசக்தி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தங்கவயல்; ராபர்ட்சன் பேட்டை விவேக் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் வரும் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்கிறது.தமிழகத்தின் ஈரோடு சிருங்கேரி மட பொறுப்பாளர் பத்மநாப அய்யர் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான வேத விற்பன்னர்கள், கும்பாபிஷேக பூஜைகளை நடத்துகின்றனர்.வரும் 6ம் தேதி புதன் கிழமை காலை 5:30 மணிக்கு முதல் கால பூஜை, கணபதி ஹோமம், கலச ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மறுநாள் 7ம் தேதி சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடக்கின்றன.வரும் 8ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 9:00 மணி முதல் 10:25 மணிக்குள்ளாக, ஐந்தாம் கால பூஜையும், விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து, மஹா தீபாராதனை நடக்கிறது.பகல் 11:00 மணிக்கு ரெட்டி கல்யாண மண்டபத்தில் அன்னதானமும், மாலை 7:00 மணிக்கு பூக்கள், மின் விளக்கு அலங்காரத்துடன், அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் பவனியும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை சக்தி முத்துமாரியம்மன் கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !