உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக முதல்வர் வருகையால் பீஹாரில் என்ன மாற்றம் வந்து விடும்: பிரசாந்த் கிஷோர் கேள்வி

தமிழக முதல்வர் வருகையால் பீஹாரில் என்ன மாற்றம் வந்து விடும்: பிரசாந்த் கிஷோர் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவான்: தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையால் பீஹாரில் என்ன மாற்றம் வந்துவிட போகிறது என்று பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி உள்ளார்.இவ்வருட இறுதியில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் பீஹாரில் வாக்காளர் ஓட்டுரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் யாத்திரையை துவங்கி இருக்கிறார். இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆக.27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் பீஹார் செல்ல உள்ளார்.இந்நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளதாவது;தமிழக முதல்வர் ஒரு வேளை பீஹார் வருகிறார் என்றால் அதனால் என்ன மாற்றம் இங்கு (பீஹார்) நிகழ்ந்துவிட போகிறது? அவரின் வருகையால் பீஹார் முன்னேறிவிடுமா?பீஹாரின் பிரச்னைகளுக்கு, பீஹாரிலேயே தான் தீர்வு காணப்பட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கு வருவதாக இருந்தாலும் சரி அல்லது கர்நாடகா முதல்வர் வருவதாக இருந்தாலும் சரி, அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.பீஹாருக்கு வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு யாத்திரை தான் தற்போது வேண்டும். பிரயோஜனம் இல்லாத மற்ற யாத்திரையால் (ராகுல் யாத்திரையை குறிப்பிடுகிறார்) என்ன ஆதாயம் கிடைத்துவிட போகிறது? காங்கிரசை குற்றம் சுமத்துகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் பிரதமர் மோடியை குற்றம் சுமத்துகிறது. ஆனால் பீஹார் இளைஞர்கள் கேட்பது எல்லாம், இங்கு வேலைவாய்ப்புகள் எப்போது கிடைக்கும், புலம் பெயர்ந்து செல்வோரை எப்போது தடுப்பீர்கள் என்பதுதான். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், பாஜ, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு தேர்தல் காலங்களில் வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர். தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் உத்திகளை வடிவமைத்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Muthukumaran
ஆக 25, 2025 12:21

அந்தந்த மணிலா பிரச்சனைகளுக்கு பூர்வளம் யாத்திரை மட்டுமே பலநிலைக்கும். வாக்காளர் பட்டியல் மணிலா அலுவலர்களால் தயாரிக்கப்படுகிறது. எனவே குழப்பம் ஏற்படுத்துவது நியாயமில்லை. கட்சி பூத் பொறுப்பாளர்க்ஸ்ல் கடைமை என்ன


பேசும் தமிழன்
ஆக 25, 2025 09:01

எங்களது முதல்வர் அங்கே வந்து.. ஹிந்தி தெரியாது போ என்று பேசுவார் பாருங்கள்.. பிறகு பாருங்கள்.. இண்டி கூட்டணிக்கு ஓட்டு பிச்சிக்கும்.. அந்த மாற்றம் போதாதா !!


thewhistle blower1967
ஆக 25, 2025 09:00

தமிழக முதல்வர் பிஜேபி கட்சியின் vote திருட்டை மக்களுக்கு தெரிய படுத்தும் ராகுல் அவர்களை ஆதரிக்க வருகிறார் ..


Mahendran Puru
ஆக 25, 2025 07:54

பிரசாந்த் கிஷோர் கட்சி ஆரம்பித்துவிட்டு படாத பாடுபடுகிறார். பாஜகவிடம் வாங்கியுள்ளாரே, அது என்னவாச்சு? ஒரு வேளை நீ வேண்டாமப்பா, நான் வோட்டர் லிஸ்டை திருத்திக் கொள்வேன்னு உ து ம சொல்லிவிட்டாரா?


Mani . V
ஆக 25, 2025 05:35

350 கோடி ரூபாய்க்கான காலக்கெடு முடிந்து விட்டது. அடுத்த பேமெண்ட் கொடுத்தால் நல்ல விதமாக ஊதுவார்


Sun
ஆக 25, 2025 04:46

பீகாரில் ராகுல் பேரணியில் ஸ்டாலின் கலந்து கொள்வது பா.ஜ.வின் வெற்றியில்தான் முடியும். பா.ஜ கட்சிக்காரர்கள் ஸ்டாலினுக்கு கும்பிடு போட்டு நன்றி சொல்ல வேண்டும்.


Kasimani Baskaran
ஆக 25, 2025 04:13

ஹிந்தி தெரியாது போடா என்ற டீஷர்ட்டுடன் செல்வார்.


ஓவிய செம்பு
ஆக 24, 2025 23:48

உமக்கு 200 குடுத்த மாதிரி ஆரியனுக்கும் 400 கோடி குடுத்து பதவிக்கு வர முடிந்தது. முட்டுக்கு எல்லாம் 200 ரே ஜாஸ்தி. koovalu, ஆர்ட்டிஸ்ட்


சாமானியன்
ஆக 24, 2025 23:35

பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தொழிலதிபர்கள் தொழில் தொடங்க தயங்குகிறார்கள். பயப்படுகின்றனர். தொழிலாளர் வன்முறை ஓட வைக்கிறது. இந்த நிலைமை மாறினால் வேலை வாய்ப்பு சிறுக சிறுக படிப்படியாக மாற்றம் வரும்.அதுவரை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதே கதைதான். ஒருத்தர் மேல ஒருத்தர் காண்டாக இருந்தால் மாநிலம் உருப்பட வாய்ப்பில்லை. ஸ்டானின் எழுதிக் கொடுத்ததை வாசித்து விட்டு வரப் போகின்றார்.ஐந்து நிமிட உரைக்கு ஐயாயிரம் கிமீ பயணம்.


xyzabc
ஆக 24, 2025 23:08

கேபிள் திருடர் பீஹாரிகளை குறித்து அவ்வள கேவலமாக பேசினார். மறக்க கூடாது. ஹிந்தி தெரியாது போடா என்று கூவினார் இன்னொருவர். வடக்கர்கள் தங்களுக்கு வோட்டை போடுவார்களா. அதனால் சென்சஸ் வேண்டும் என பறைந்தார் முதல்வர். இப்பேர்பட்ட ஜனங்களை பீஹாருக்கு உள்ளே வராமல் தடுக்கனும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை