மேலும் செய்திகள்
அரக்கோணம் தடத்தில் 10 ரயில் சேவை மாற்றம்
05-Oct-2024
பெங்களூரு: சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், கோவாவை போன்று கர்நாடக கடற்கரைகளில், 'டென்ட்' போடவும், மதுபானம் விற்கவும் அனுமதி அளிக்க, சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து, கர்நாடக சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கை:கோவா போன்று சுற்றுலா பயணியரை ஈர்க்க கடற்கரைகளில், நாமும் சில மாற்றங்களை செய்ய வேண்டும். கடற்கரைகளில் மதுபானம் விற்பதற்கான தடையை நீக்க வேண்டியது அவசியம்.கடற்கரைகளில் பாதுகாப்பை அதிகரிக்க, இரவு நேரத்தில் மக்கள் அதிக நேரம் பொழுது போக்க வசதியாக, அதிகமான மின் விளக்குகள் பொருத்த, சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. கடற் கரை அருகில், 'டென்ட்' போட, அரசு மற்றும் தனியார் இடங்களை தேடும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் நோக்கில், கடற்கரைகளில் மது அருந்தவும், விற்பனைக்கும் அனுமதி அளிக்கும்படி, வேண்டுகோள் வந்துள்ளது. இது குறித்து, அரசும் ஆலோசிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
05-Oct-2024