உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மாநில வளர்ச்சி வேகம் அடையும்: பீஹார் பிரசாரத்தில் மோடி உறுதி

தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மாநில வளர்ச்சி வேகம் அடையும்: பீஹார் பிரசாரத்தில் மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ''பீஹார் மாநிலத்தில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மாநிலத்தின் வளர்ச்சி வேகம் அடையும்'' என தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.பீஹாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ., 14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் பா.ஜ., மற்றும் காங்., கூட்டணிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.இந்நிலையில் இன்று (அக் 24) ஆளும் தேஜ கூட்டணியின் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். சமஸ்திபூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாரத ரத்னா விருது பெற்ற கர்பூரி தாக்கூர் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். எங்களுக்கு உத்வேகம் அளித்தார். அரசியலமைப்பு சட்டத்தின் நகலை கையில் வைத்திருப்பவர்கள் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் மோசடிகளில் ஈடுபட்டன. அவர்களின் தலைவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர். கர்பூரி தாக்கூரின் விருதை திருட முயற்சி செய்தனர். பீஹார் மக்கள் காட்டு ராஜ்ஜியத்தை புறம் தள்ளிவிட்டு, நல்லாட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும். பீஹார் மாநிலத்தில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மாநிலத்தின் வளர்ச்சி வேகம் அடையும். நிதிஷ் குமார் தலைமையில், தேஜ கூட்டணி இந்த முறை பீஹாரில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் இருந்த போது ஒதுக்கப்பட்ட நிதியை விட பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பீஹாருக்கு மூன்று மடங்கு அதிக நிதியை வழங்கியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

கர்ப்பூரி தாக்கூர் குடும்பத்தினருடன் உரையாடிய மோடி

முன்னதாக, சமஸ்திபூருக்கு வந்த பிரதமர் மோடி பீஹார் முன்னாள் முதல்வரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான கர்ப்பூரி தாக்கூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

மனிதன்
அக் 24, 2025 20:46

அம்மாநிலம் நம்மைவிட குறைந்தது நாற்பது வருடம் பின்னோக்கி இருக்கிறது....


K.n. Dhasarathan
அக் 24, 2025 20:42

பிரதமரே கடந்த 14 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் நீங்கள் உ. பி , ம. பி, போன்ற மாநிலங்களில் என்ன அசுர வேகம் கொண்டு வந்தீர்கள் ? இன்னும் காட்டாட்சி தான், இதில் பெருமை வேறு, டபுள் என்ஜின் என்று, அது உண்மையில் ட்ரொப்ல் Trouble என்ஜின் ஆனதுதான் மிச்சம்.


Gokul Krishnan
அக் 24, 2025 17:31

புதிய பாலங்கள் கட்டியவுடன் இடிந்து விழுந்தன அதை கண்டு கொள்ள வில்லை இப்படி பல சாதனைகளை சொல்லி கொண்டே போகலாம்


Nathansamwi
அக் 24, 2025 15:54

ஏன் ஜி 2020 தேர்தல் உங்க கூட்டணி தான வெற்றி பெற்றார்கள் ? எவ்ளோ ஊழல் வடமாநில தொழிலார் புலம் பெயர்வு னு எவ்ளோ பிரச்சனை வந்திச்சு ? எத்தனை அணைகள் உடைந்தது ? எல்லாம் ண்ட கூட்டணி ஆட்சிக்கு கீழ தானே ? சும்மா தேர்தல் வந்தா அடிச்சு விடுறது ? பீகார் கு நீங்க என்ன பன்னி கிழிச்சீங்க ?


அப்பாவி
அக் 24, 2025 15:32

இன்னொரு வரைக்கும் இவிங்க ஆட்சிதான். பிஹாரிங்க தெற்கே பன்ஹ்சம்.பொழைக்க வந்ததுதான் இவிங்க குடுத்த வளர்ச்சி . அப்பிடி வந்தவங்களும் இங்கேருந்து போகாம தமிழ் படிக்குறாங்க.அதுவும் வளர்ச்சி.


Oviya Vijay
அக் 24, 2025 15:28

ஜீ மைண்ட் வாய்ஸ்: இதே டயலாக் நாம தமிழ்நாட்டுல வந்து பேசுனா மட்டும் நடக்க மாட்டேங்குது... என்னான்னு தெரியலையே... எத்தனை ரோடு ஷோ செஞ்சு பார்த்தாலும் ஒரு பருப்பும் வேக மாட்டேங்குது...


vivek
அக் 24, 2025 16:45

ஓவியமே 20 லட்சம் டன் நெல் மூட்டைகளை வீண்.....எதற்கும் இதயம் பத்திரம்


ராஜாராம்,நத்தம்
அக் 24, 2025 17:05

மதம்மாறிட்டாலே இந்திய எதிர்ப்பு என்பது ஆட்டோமேடிக்காக இரத்தத்தில் ஊறி விடும் போல அப்படித்தான ஓவியமானவரே


KOVAIKARAN
அக் 24, 2025 15:15

லலித் நாராயண் மிஸ்ரா அவர் சகோதரர் ஜெகநாத் மிஸ்ரா அரசியலில் முக்கிய அங்கம் வகித்தார்கள் இப்போ அவர்கள் பெயரே யாருக்கும் நினைவில் இல்லை. ஏனென்றால் அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். லல்லு பிரசாத் யாதவ் அவர்களுக்கு முன்னரே பீகாரின் ஊழல் மன்னன் என்று பெயர்பெபெற்றவர். இந்திரா காந்தி இருந்தபோது ஒரு சக்தி மிக்க அரசியல் தலைவராக வலம் வந்தவர். பீஹார் மக்கள் ஊழல்வாதிகளை நினைவில் வைத்துக்கொள்வதில்லை. தமிழகத்தில் உள்ள ஓசி சாராயத்திற்கும், ஓசி பிரியாணிக்கும் 200 ரூபாய்க்கும் அலையும் மக்களைப்போல அல்ல அவர்கள்.


திகழ்ஓவியன்
அக் 24, 2025 14:22

அப்பா இதுநாள் வரை யார் ஆட்சி ஏன் அடையவில்லை சாஹேப், இன்னுமா நீங்கள் நம்புகிறீர்கள் மக்கள் ஏமாறுவார்கள் என்று


vivek
அக் 24, 2025 15:47

டாஸ்மாக் ஒழிப்போம் என்று புருடா விட்டாயே திகழ் சொம்பு


vivek
அக் 24, 2025 16:07

20 லட்சம் டன் நெல்லை வீண்


Field Marshal
அக் 24, 2025 14:19

லலித் நாராயண் மிஸ்ரா அவர் சகோதரர் ஜெகநாத் மிஸ்ரா அரசியலில் முக்கிய அங்கம் வகித்தார்கள் இப்போ அவர்கள் பெயரே யாருக்கும் நினைவில் இல்லை


A.Gomathinayagam
அக் 24, 2025 14:09

மூன்று மடங்கு நிதியை நான்கு மடங்காக உயர்த்தினால் மேலும் சிறந்த வளர்ச்சி காணலாம்


முக்கிய வீடியோ