உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சைக்கோ தலைவரால் சீரழிந்த மாநிலம்...! சரமாரியாக விளாசினார் சந்திரபாபு நாயுடு

சைக்கோ தலைவரால் சீரழிந்த மாநிலம்...! சரமாரியாக விளாசினார் சந்திரபாபு நாயுடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: 'ஆந்திர மாநிலம் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு சைக்கோ தலைவரால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது' என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.

அசகாய வெற்றி

ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் அடித்து தூள் செய்து அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைத்தார் சந்திரபாபு நாயுடு. அவரின் அசகாய அசுர வெற்றி தேசிய அரசியல் களம் வரை பரபரப்பாக பேசப்பட்டது.

மனநலம்

இந் நிலையில், ஆந்திர மாநிலம் 5 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட தலைவரால் ஆளப்பட்டதாகவும், அவரது ஆட்சியில் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார். கோதபேட்டா தொகுதிக்கு உட்பட்ட வனப்பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நாயுடு பேசுகையில் ஜெகன்மோகன் ரெட்டியை இவ்வாறு குற்றம்சாட்டி பேசி உள்ளார்.

என்ன நடந்திருக்கும்?

அவர் மேலும் பேசியதாவது: மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி விரும்பினார். ஆனால் அப்படி அவர் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

ரூ,1,100 கோடி

மாநிலத்தையும், அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும் முன்னேற்றுவது எங்கள் கடமை. பஞ்சாயத்துகளை முன்னேற்றுவதற்காக ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளோம். கடந்த ஆட்சியில் தெருவிளக்குகள் திருடப்பட்டன. ஆனால் நாங்கள் இப்போது வீணாகும் பொருட்களில் இருந்தும் வட வருமானத்தை உருவாக்க முயற்சி எடுத்து இருக்கிறோம்.

600 வீடுகள்

தினசரி கூலித் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும். தேர்தலுக்கு முன்பாக ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதாக உறுதி அளித்து இருந்தோம். வனப்பள்ளி கிராமத்தில் 600 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி செய்து தரப்படும். இலவச கேஸ் சிலிண்டர்கள் அனைத்து தரப்பினருக்கும் விரைவில் விநியோகிக்கப்படும்.

5 ஆண்டுகள்

கிட்டத்தட்ட சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகளில் 40% முடிந்துவிட்டது. அனைத்து கிராமங்களிலும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சாலை வசதி ஏற்படுத்தப்படும் என்று பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2024 13:16

மன்னரை விடவா உங்க தலைவர் மிக மோசமானவர்?


Sivagiri
ஆக 24, 2024 13:12

தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்த வெளிமாநிலத்தவர்களுக்கும் , தமிழ் பாடமாக படித்த பிற மொழி மாநிலத்தவர்களுக்கும் , அரசு வேலை முன்னுரிமை அளிக்க கூடாது , , தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் . . . அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடும் பொழுது , விண்ணப்பத்தில் , பொதுவெளியில் , தாய்மொழி என்னவென்று தெரிவிப்பது கட்டாயமாக்க வேண்டும் - - -


RAMAKRISHNAN NATESAN
ஆக 24, 2024 12:49

எங்க புலிகேசி மன்னரை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே ????


Ramesh Sargam
ஆக 24, 2024 12:35

நாயுடு அவர்கள் மீண்டும் ஆட்சியைப்பிடிப்பாரா என்று ஒரு கேள்வி, ஒரு சந்தேகம் மக்களிடையே இருந்தது. அவர் இப்பொழுது ஆட்சியில் அமர்ந்துவிட்டார். இதுபோன்று ஒரு சந்தர்ப்பம் அவருக்கு மீண்டும் கிடைக்குமா என்றால், சந்தேகமே. ஆகையால் இந்தமுறை அவர் மக்களுக்காக நிறைய செய்யவேண்டும். கட்சிக்குள் இருக்கும் ஊழல் தலைவர்களை கண்டறிந்து நீக்கவேண்டும். முதலில் அசிங்க அரசியலை தவிர்க்கவேண்டும். இனி ஜெகனை பற்றிப்பேசுவதும், மற்ற அரசியல் எதிரிகளை பற்றி பேசுவதையும் நிறுத்தவேண்டும். மாறாக இவர் செய்யும் மக்கள் பணியால், மக்கள் இவரை புகழவேண்டும்.


பாமரன்
ஆக 24, 2024 12:24

தமிழ் நாட்டில் தான் அரசியல் வியாதிகள் இப்படி கீழ்த்தரமான பேச்சுக்கள் பேசுவது வழக்கம்... ... ஆனால் ஆந்திராகாரணுவ திரும்ப அவங்க பாரம்பர்யமான கக்கூஸ் கழுவும் காலத்துக்கே போறாய்ங்க போல...


Kumar Kumzi
ஆக 24, 2024 13:24

உமது தானைத்தலைவர்தான்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 24, 2024 14:15

.... குடும்பத்தை காப்பாத்துறதுக்காக கூலிக்கு மாரடிச்சா பத்தாது .... அதையும் தெரிஞ்சுக்கணும் .....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 24, 2024 15:06

ஆந்திராகார .... ஓஒ .... இது ஓங்கோல் குடும்பத்தின் கொத்தடிமை இல்ல ன்னு நான் நம்பிட்டேன் ...


God yes Godyes
ஆக 24, 2024 12:22

ஆந்திராவில் வெள்ளைக்காரன் திராவிடர் என யாரையும் கண்டு பிடித்து பெயர் வைக்கவில்லை.அன்றும் இன்றும் ஆந்திரர்கள் அசலாக ஒரே மனதுடன் நிற்கிறார்கள்.தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை கால்டுவெல் வெள்ளை தோலன் கோவணம் கட்டிய கருப்பு தமிழரை பார்த்துதிராவிட ராக்கி தமிழின சிந்தனையை பலபட்டறை சிந்தனைகளாக மாற்றி விட்டதால் எவனும் எதிலும் எப்போதும் நாலு பேருக்கு நன்மை கிடைக்கும் பொது விஷயங்களில் ஒருமித்த கருத்து கொள்வதில்லை.


God yes Godyes
ஆக 24, 2024 12:07

செக்கு மாட்டு குணமுள்ள தமிழர்களை விட ஆந்திர அறிவாள வாக்காளர்கள் ஆட்களை படிப்பதில் கில்லாடிகள்.


Sivagiri
ஆக 24, 2024 12:06

பரவாயில்லை - - ஆந்திரா தப்பிச்சிருச்சு போல - - தமிழ்நாடு அறுபது வருஷமா சிக்கி சீரழிஞ்சிக்கிட்டிருக்கு - -


God yes Godyes
ஆக 24, 2024 12:03

இவரல்லவோ ஜனநாயக மாண்பினை நன்கறிந்தவர். ரெட்டியோ மட்டியோ என்பர்.இனி ரெட்டி கையில் ஆட்சி செல்லாது.அதுவும் கிறித்துவ ரெட்டி.


ஆரூர் ரங்
ஆக 24, 2024 11:55

மாமனார் NTR பற்றியும் இப்படித்தான் குறிப்பிட்டார் என நினைவு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை