உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛போர் பகுதிகளில் கவனம் தேவை: இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுரை

‛‛போர் பகுதிகளில் கவனம் தேவை: இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛உக்ரைனில் போர் நடக்கும் பகுதிகளில் இந்தியர்கள் விலகி இருக்க வேண்டும்'' என மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த 3 பேர், முகவர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு ரஷ்யாவில் ராணுவத்தில் உதவியாளர்களாக பணிபுரிய அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் பாதிக்கப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஓவைசியை அணுகியது. இதன் மூலம் இந்த விவகாரம் வெளி உலகிற்கு தெரிந்தது. இதனையடுத்து ஓவைஸியும், உக்ரைனுக்கு எதிராக கட்டாயப்படுத்தப்பட்டு போரிட நிர்பந்திக்கப்படும் 3 இந்தியர்களை காப்பாற்றும்படி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை வலியுறுத்தி இருந்தார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‛‛ ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக பணி புரிவதற்காக இந்தியர்கள் சிலர் ஒப்பந்தம் போட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிந்து உள்ளோம். அவர்களை முன்கூட்டியே பணியில் இருந்து விடுவித்து அனுப்புவது தொடர்பாக இந்திய தூதரகம் சம்பந்தப்பட்ட ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறது. இந்திய குடிமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடனும், போர் பகுதிகளில் இருந்து விலகியே இருக்கும்படி அறிவுறுத்துகிறோம்''. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
பிப் 24, 2024 00:18

அடுத்தமுறை இந்தியாவின் மீது எந்த நாடாவது போர் தொடர்ந்தால், முதலில் வொவொரு மாநில முதல் அமைச்சர்களும், மற்ற அமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும், பிரதமர் தலைமையில் போர் நடக்கும் இடத்திற்கு சென்று அங்கு போர் புரியும் நமது வீரர்களுக்கு அவர்களால் ஆன உதவியை செய்யவேண்டும். உபத்திரவம் எதுவும் செய்யக்கூடாது. கண்டிப்பாக அங்கேயும் no dirty politics. அப்பத்தான் நமது ராணுவ வீரர்கள் படும் கஷ்டங்கள் அவர்களுக்கு புரியவரும்.


RAMAKRISHNAN NATESAN
பிப் 23, 2024 19:27

ரஷ்யாவுக்கு ஆதரவா, உக்ரைனுக்கு எதிரா சண்டை போட முடியாது ..... உடம்பு நோவும் ..... ஆனா ஜிக்காத்து வேணும் ...... வயிறு நிரம்பணும் ...... புள்ள குட்டிகளை காப்பாத்தணும் ......


K.Ramakrishnan
பிப் 23, 2024 19:19

தலைநகரிலும் கவனம் தேவை. நாட்டின் சொந்தங்கள் மீதே டிரோன்கள் ஏவுகிற காலம் ஆயிற்றே...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை