உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பங்குச்சந்தையில் முதலீடு: டாப் 5 மாநிலங்கள் எவை தெரியுமா?

பங்குச்சந்தையில் முதலீடு: டாப் 5 மாநிலங்கள் எவை தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய பங்குச்சந்தைகள் நாளுக்கு நாள் உயர்வை சந்தித்து வரும் நிலையில், உ.பி., ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) கூறியுள்ளது.இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம், பங்குச்சந்தையில் பதிவு செய்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி சாதனை படைத்து உள்ளது. முதலீடு செய்பவர்களில் அதிகம் பேர் மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.இந்நிலையில், என்எஸ்இ வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது: பங்குச்சந்தையில் பதிவு செய்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1.7 கோடி முதலீட்டாளர்கள் உள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 16.8 சதவீதம் ஆகும்.இரண்டாவது இடத்தில் 1.1 கோடி பேருடன்(11.1%) உ.பி.,யும்3வது இடத்தில் 88.5 லட்சம் பேருடன்(8.7 %) குஜராத்தும்4வது இடத்தில் 59 லட்சம் பேருடன் ( 5.8 சதவீதம்) மேற்கு வங்கமும்5வது இடத்தில் 57.8 லட்சம் பேருடன் (5.7 %) சதவீதம் ராஜஸ்தானும் உள்ளது.பங்குச்சந்தை முதலீடு செய்துள்ளவர்களில் 4 ல் ஒருவர் உ.பி., ராஜஸ்தான், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். மொத்த முதலீட்டாளர்களில் 48 சதவீதம் பேர் மஹாராஷ்டிரா, உ.பி., குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.வட மற்றும் கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள், பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தென்காசி ராஜா ராஜா
செப் 28, 2024 18:21

சூதாட்டமா உள்ளே போனா பணம் காலி.முதலீட்டாளரா போனா வெற்றி


Anand
செப் 28, 2024 17:30

ஆனால் சரக்குலே நாம தான் நம்பர் ஒன்....


Apposthalan samlin
செப் 28, 2024 16:37

பங்கு சந்தையினால் சம்பாதித்தார் என்று எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை பணம் இழந்தவர்கள் அநேகம் பேர்கள் உள்ளனர் தெரிந்தவர்கள் புத்தி உள்ளவர்கள் பங்கு சந்தையில் முதலீடு பண்ண மாட்டார்கள் .


Thatsanamurthi
செப் 28, 2024 17:44

அறிவுடன் நியாயமான லாபம் விரும்பும் யாரும் இழ்ப்பு பெற வில்லை. பங்கு சந்தை பற்றி தெரியாத தற்குறிகள் , பேராசை நபர்கள் மட்டுமே நட்டம் அடைவர்


ஆரூர் ரங்
செப் 28, 2024 18:15

உங்க வட்டாரம் அப்படின்னா எங்க உறவுகள் 50 ஆண்டுகளாக முதலீடு செய்து முன்னேறியிருக்கிறார்கள்.


Ravi Mehta
செப் 28, 2024 22:37

ஐபி யு எனத் வித் கனவுலேட்ஜ் யு ஒன்டீ lose


kirupanantham kanthimathinathan
செப் 28, 2024 15:42

நாம் வேலை செய்வதற்கு படிக்கிறோம் . முதலீடு செய்ய நமக்கு சிறுது பயம் . துணிச்சல் குறைவு


Kumar Kumzi
செப் 28, 2024 15:15

நாம பத்து லட்சம் ஓவா வருமானம் கள்ளக்குறிச்சி மாடல் டாஸ்மாக்ல தானே முதலீடு செய்வோம் செத்து போனாலும் பத்து லட்சம் ஓவா கரண்டிப்பா


Kanagaraj
செப் 28, 2024 16:37

நீங்கள் ஒரு பெரிய முதலீட்டாளரா. ?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 28, 2024 20:11

குமார் சொன்னவுடன் கள்ளக்குறிச்சி பயனரின் குடும்ப உறவுக்கு கோபம் சுர்ர்ர் ருன்னு ஏறிடுச்சு ......


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 28, 2024 14:21

தமிழ்நாட்டுல எங்களுக்கு திராவிட மாடல் கொடுக்குற பணம், சரக்கு, பிரியாணி பொட்டலம் இதுவே போதும் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை