உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பங்குச்சந்தை முறைகேடு: செபி முன்னாள் தலைவர் மீது வழக்குப்பதிய உத்தரவு

பங்குச்சந்தை முறைகேடு: செபி முன்னாள் தலைவர் மீது வழக்குப்பதிய உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக செபி முன்னாள் தலைவர் மாதவி புரி உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியின் தலைவராக இருந்தவர் மாதவி புரி. இவர் தன் பதவியை பயன்படுத்தி ஊழல் செய்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதானி முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தவில்லை எனவும் ஹிண்டன்பர்க் தெரிவித்து இருந்தது. இதனை அவர் மறுத்து இருந்தார்.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி சசிகாந்த் ஏக்நாத் ராவ் பங்கர், '' குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது. இது குறித்து நேர்மையான மற்றும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இது குறித்து மாதவி புரி உள்ளிட்ட ஐந்த பேர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விசாரணை அமைப்புகளும், செபியும் எந்த நடவடிக்கையையும் எடுக்காத காரணத்தினால், இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய சூழல் வந்துவிட்டது. விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். இது குறித்து 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என உத்தரவிட்டார்.

மேல்முறையீடு

இதனிடையே, சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப் போவதாக செபி கூறியுள்ளது. தங்களின் தரப்பு வாதத்தை கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
மார் 03, 2025 08:30

எல்லா எடத்திலேயும் இவிங்க ஆளுங்கதான் இருப்பாங்க. நீதிமன்றம் பாவம் எல்லார் நேரத்தையும் வீணாக்குது.


rpk
மார் 03, 2025 02:33

supreme court must watch this case


ஷாலினி
மார் 03, 2025 02:28

விசாரணை நடந்தாலும் அதன் பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்


xxxx
மார் 03, 2025 06:40

Correct.....


புதிய வீடியோ