உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பும்ராவை காயப்படுத்த திட்டமா? ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் மீது புகார்

பும்ராவை காயப்படுத்த திட்டமா? ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் மீது புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட், லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளித்த, இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, 54 பந்துகளை (5 ரன்) எதிர்கொண்டார்.இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் முகமது கைப் கூறியது: லார்ட்ஸ் டெஸ்டில் கடைசி நேரத்தில் பும்ரா, பேட்டராக சிறப்பாக செயல்பட்டார். இவருக்கு எதிராக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் என இருவரும் மாறி மாறி, பவுன்சர்களாக வீசினர். ஒருவேளை அவுட்டாகவில்லை என்றால், பும்ராவின் கை விரல்கள், தோளில் காயமடையும் வகையில் பவுலிங் செய்தனர்.'எதிரணியில் முக்கிய பவுலரான பும்ராவை எப்படியும் காயப்படுத்த வேண்டும்,' என்ற நோக்கம் தான், அவர்கள் இருவருக்கும் இருந்தது. இதனால் தான் அப்படி பந்து வீசினர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

vijay
ஜூலை 17, 2025 05:06

கடந்த முறை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, ஆண்டர்சனுக்கு இப்படித்தான் பும்ரா பந்து வீசினார்


vijay
ஜூலை 17, 2025 05:04

ஒரு அணியின் சிறந்த பவுலருக்கு பந்து வீசும் போது அனைத்து அணிகளும் இந்த முயற்சியை மேற்கொள்ளும்..


rengarajsan
ஜூலை 17, 2025 06:48

இதில் என்ன தவறு எல்லா அணியும் வெற்றி பெற தான் முயற்சிக்கும். பும்ரா ஆண்டர்சன் மற்றும் பிராட் பந்துவீச்சை சமாளித்து ஒரே ஒவரில் 35 ரன்கள் அடித்தது கைப்பிற்கு ஞாபகம் இல்லை என நினைக்கிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை