உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரதட்சணை வழக்குகளில் கவனம் தேவை: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

வரதட்சணை வழக்குகளில் கவனம் தேவை: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரதட்சணை வழக்குகளில் தீர்ப்பு வழங்கும்போது, அப்பாவி மக்கள் தேவையில்லாமல் துன்புறுத்தப்படுவதை தடுக்க விசாரணை நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.கர்நாடகாவில் ஐ.டி., துறையில் பணிபுரியும் அதுல் சுபாஷ்(34) என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் 90 நிமிட வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில், அதிக சம்பளம் பெறும் மனைவி விவகாரத்திற்கு பிறகு அதிக பராமரிப்பு தொகையாக ரூ.4 லட்சம் கேட்டார். உறவினர்கள் மீது பொய் வழக்கு தொடர்ந்தார். விவாகரத்து வழக்கில் பராமரிப்பு தொகையை குறைக்க பெண் நீதிபதி லஞ்சம் கேட்டார். தன் மீதும், குடும்பத்தினர் மீதும் மனைவி குடும்பத்தினர் வரதட்சணை புகார் கொடுத்தார் என அடுக்கடுக்கான புகார்களை கூறியிருந்தார். இந்த விவகாரம் இந்திய அளவில் கவனத்தை பெற்றது.இந்நிலையில், வரதட்சணை புகார் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் நீதிபதி கோடிஸ்வர் சிங் அமர்வு கூறியதாவது: திருமண பிரச்னை காரணமாக குடும்பத் தகராறு ஏற்படும் போது கணவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சிக்க வைக்கும் போக்கு அதிகரித்து உள்ளது என்பது நீதித்துறை அனுபவம் மூலம் நன்கு அறியப்பட்ட உண்மையாகும். சட்ட விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அப்பாவி குடும்ப உறுப்பினர்கள் தேவையற்ற துன்பங்களை சந்திப்பதை தவிர்க்கவும் இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.திருமண அமைப்புக்குள் உள்ள பிரச்னை காரணமாக, அது சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. இதனால், ஐ.பி.சி., 498ஏ( பெண்களை கணவர் மற்றும் உறவினர்கள் கொடுமைபடுத்துபவர்களுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு) சட்டத்தின் கீழ் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பெண்கள் அதிகளவில் புகார் அளித்து வருகின்றனர். திருமணம் தொடர்பான பிரச்னைகளின் போது தெளிவற்ற மற்றும் பொதுவான குற்றச்சாட்டுகளை தீவிரமாக ஆராயாவிட்டால், சட்ட செயல்முறைகளை தவறாக பயன்படுத்த வழிவகுக்கும்.சில சமயங்களில் மனைவியின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு இணங்குவதற்காக கணவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஐபிசி 498(ஏ) பிரிவை பயன்படுத்துவதும் நடக்கிறது. அதற்காக பாதிக்கப்படும் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaran
டிச 11, 2024 21:40

கைக்கும் வாய்க்கும் பணம் சம்பாதித்தால் போதும் ... 3 வயதில் இருந்து கஷ்டப்பட்டு படித்து, டியூஷன் பீஸ் கட்டி , அப்புறம் வேலைக்கு இன்டெர்வியு ல பாஸ் பண்ணி , வேலைக்கு சேர்ந்து , வரி கட்டி , அப்புறம் எல்லா பில்ஸ்களையும் கட்டி, அப்புறம் டிவோரசுக்கு காம்பென்சேஷன் ... இது எல்லாம் தேவையா .. ஆண்களே கொஞ்சம் யோசிங்கப்பா ...


தாமரை மலர்கிறது
டிச 11, 2024 20:02

மேலைநாடுகளில் அதிக ஆலிமோனியால் திருமணம் செய்வதையே ஐம்பது சதவீத ஆண்கள் நிறுத்திவிட்டார்கள். திருமணம் என்பது இருபாலாருக்கும் சமபலன் இருக்க வேண்டும். பெண்ணுக்கு மட்டுமே பலன் என்று பாரபட்சமான சட்டம் அமைக்கப்பட்டால், ஆண்கள் திருமண செய்வதை சுமையாக கருதுவார்கள்.


Dharmavaan
டிச 11, 2024 19:35

இது போல் ப்ளாங்கெட் வழக்குகள் எல்லாமே தவறான பிளாக்மெயில் செய்ய பயன்படுகிறது சட்ட திருத்தும் தேவை


Ganesh
டிச 11, 2024 19:17

Higher Judiciary every time give advice whenever this kind of issues happens.every day in india judiciary is take serious note .its destroying family structure .Family courts are not following instructions.In judiciary any Judicial officials are punished not following the Supreme Court orders.All womens filing false case against aged in-laws and attaching property first thing they used do against the husband. Nowdays they are filing POSCO case with help of daughters against fathers Court should think of framing the ges .Even advocates should be punished most of the women not even know to file POSCO case against father, this kind of advice given by advoctes if they are unable to prove the fabricated imaginary allegations especially against old age parents and Posco case .Most of the innovative allegations are d by the Lawers .


G Mahalingam
டிச 11, 2024 19:03

கீழ் கோர்ட் நீதிபதிகள் லஞ்சம் வாங்குவது அதிகம் ஆகி விட்டது. பெண் வீட்டார் பணக்காரர் ஆக இருந்தால் பாரமரிப்பு செலவு கொடுக்க தேவை இல்லை என்று சட்டம் போடவேண்டும்.


Sampath Kumar
டிச 11, 2024 18:35

எல்லாம் சரி பராமரிப்பு தொகையை குறைக்க பெண் நீதிபதி லஞ்சம் கேட்டது குறித்து ஒரு வரி கூட இல்லை..


GMM
டிச 11, 2024 18:15

திருமணம் பதிவு சார் பதிவாளர்.வரதட்சணை பேச்சு வார்த்தை திருமணம் முன் முடிந்து விடும். மேலும் சட்டம் இருக்கு என்பதற்கு போலீஸ், வழக்கறிஞர் வருவாய் கோட்ட அதிகாரி அறிக்கை பெறாமல் தலையீடு கூடாது. போலீஸ், வக்கீலிடம் மக்கள் விவரம் இருக்காது. கணவன், மனைவி, உறவினர் விவரம் மிரட்டி பெறுகின்றனர். எந்த நீதிமன்றமும் சமரச முயற்சி செய்வது கிடையாது. குற்றச்சாட்டுக்கு உள்ளான போலீஸ், வக்கீல், நீதிபதி , மனைவி மீது என்ன நடவடிக்கை. ? ஒன்றும் இருக்காது. அறிவுரை தான் அதிக பட்ச தண்டனை. அரசும் தலையிடாது. அப்போ வருமானம் தரும் வரதட்சணை, பாலியியல், வன்கொடுமை புகார் / வழக்கு பதிவாகி கொண்டு தான் இருக்கும். எந்த சட்டங்களை நீக்க வேண்டும். அமுல்படுத்துவது கடினம்.


raja
டிச 11, 2024 16:51

இது போல் தான் தீண்டாமை வன் கொடுமை சட்டமும் தவறா பயன் படுது... ஆசிரியர்கள் மாணவிகளுக்கு இன்டெர்னல் மதிப்பெண் வழங்க வில்லை என்றால் போக்ஸோ சட்டமும் தவறாக பயன்படுத்த படுகிறது யுவர் ஹானர்....


vbs manian
டிச 11, 2024 16:33

அன்பு பாசம் மறந்து பணம் ஒன்றையே குறிக்கோள் கொண்டு இப்போது வரதட்சிணை விவாகரத்து வழக்குகள் நடைபெறுகின்றன. எல்ல பழியும் கணவன் மீதே. சட்டங்கள் ஆதரவு. நீதித்துறை இந்த அரக்கத்தனமான சட்டதிருத்தங்களை வாபஸ் பெற வேண்டும். சட்டங்கள் திருமண உறவை மேம்படுத்தவேண்டும். நரகம் ஆகிவிட கூடாது. பெண்கள் பழிவாங்கும் நோக்கில் நடந்து கொள்கின்றனர். குடும்பம் சிதைந்து குழந்தைகள் வாழ்வும் தடம் புரள்கிறது. சட்ட சீர்திருத்தம் இப்போதைய கட்டாயம்.


ஆரூர் ரங்
டிச 11, 2024 16:23

வரதட்சணை, மணவிலக்கு வழக்குகளில் பெண்ணின் தரப்பு வக்கீல்கள்தான் பொய்க் குற்றச்சாட்டுகள், புகார்களை கற்பனையாக சேர்த்து விட ஐடியா கொடுக்கிறார்களாம். அவர்களையும் நல்லா விசாரிங்க எஜமான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை