உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தை பார்த்த நபரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது தவறானது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.சென்னை அம்பத்துார் பகுதியை சேர்ந்த, 27 வயது வாலிபர், மொபைல் போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார். அவர் மீது, தகவல் தொழில்நுட்பம், போக்சோ சட்டப் பிரிவுகளில், அம்பத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக வழக்கை விசாரித்த, சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 'ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல. அவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவது தான் குற்றம்' என தீர்ப்பு அளித்தார்.தவறு தான்! இதையடுத்து, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன் தீர்ப்புக்கு எதிராக குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று (செப்.,23) தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி., பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

* குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் தான். * குழந்தைகளின் ஆபாச படம் என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்க அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். * ஒரு நீதிபதி எவ்வாறு இப்படி கூற முடியும். இது கொடுமையானது' என தீர்ப்பளித்தனர். * குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் அல்ல என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

என்றும் இந்தியன்
அக் 06, 2024 19:40

இதனால் வந்த விளைவு என்ன. இப்போது terrorist group IT இதை ஒரு ஆயுதமாக எடுத்துக்கொண்டு போனில் இப்படி பேசுகின்றார்கள் உன் மீது இந்த வழக்கு உள்ளது மும்பை போலீஸ் ஸ்டேஷனில் அவன் இருப்பது கல்கத்தா, டில்லி சென்னையில் ...... ஆகவே இப்பொழுதே நீ இந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவேண்டும் என்று ....... உனது விசாரணைக்கு முன் நீ உனது சேவிங் பேங்க் + Fixed Deposit அமௌண்ட்டை இந்த வங்கி ............. க்கு அனுப்பு 24 மணிநேரத்தில் இந்த பணம் ரிப்போர்ட் சரியானவுடன் திருப்பி அனுப்பப்படும் என்று. இது வரை பலர் ஏமாந்திருக்கின்றார்கள் இந்த போன் + போலீஸ் ஸ்டேஷன் வீடியோ மூலமாக.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 25, 2024 01:45

நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது - அவர். மாதிரி இல்லை உண்மையாவே செருப்பால தான் அடிச்சேன் - உச்சநீதிமன்றம்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 25, 2024 00:24

அவருக்கு அது தப்பாக படவில்லை.


Kanns
செப் 23, 2024 20:42

Judgement Given by Madras HC was on Merits as per Pocso Law BUT SC Overturned it for Booking More Cases against Common People Judges, advocates &RulingParty Men Will Never be Booked/Arrested/Prosecuted/Punished for Any Crimes to Feed Advocates. SHAMEFUL JUSTICE


Velan Iyengaar
செப் 23, 2024 21:48

பிரிஜ்ஜிபூஷண் மாதிரி என்று சும்மா சிம்பிளா சொல்லிட்டு போங்களேன்


Narayanan Muthu
செப் 23, 2024 17:18

RSS பின்புலம் உள்ளவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு தருவதால் கூட இருக்கலாம்.


Velan Iyengaar
செப் 23, 2024 16:22

அந்த அநீதிபதி புகைப்படத்தை ஏன் போடவில்லை ?? அசிங்கமா இருக்கா ???


Velan Iyengaar
செப் 23, 2024 16:21

99% ஆட்கள் கேப்மாரிகளாக தான் இருப்பார்கள் .. ஊரை ஏமாற்ற இப்படி வேஷம் போடும் கேனஜென்மங்கள்


Velan Iyengaar
செப் 23, 2024 16:14

காலக்கொடுமை .... ஆசாமி எப்படிப்பட்டவன் என்று கடவுள் எதாவது ஒரு ரூபத்தில் காட்டிக்கொடுத்துவிடுவான் .....


Velan Iyengaar
செப் 23, 2024 16:13

ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு பெற்றோர் தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு சென்று அவர்கள் மகனுக்கு இனிப்பு தின்பதை நிறுத்துமாறு அறிவுரை சொல்லச்சொல்லி கேட்டுக்கொண்டனர் ....ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களை அடுத்த வாரம் வருமாறு சொல்லி அனுப்பிவிட்டார் .. அடுத்தவாரம் பெற்றோர் மீண்டும் சென்று அவரை சந்தித்தனர் ... அப்போது ராமகிருஷ்ண பரமஹம்சர் சிறுவனிடம் இனி இனிப்பு சாப்பிடாதே .. அது உடம்புக்கு கெடுதி ன்று அறிவுரை கூறினார் ... பெற்றோர் இதை ஏன் ஏங்க போனவாரம் சொல்லவில்லை என்று வினவினர் ... அதற்கு ராமகிருஷ்ண பரஹம்சர் நானும் இனிப்பு விரும்பி உண்பேன் ... பிறருக்கு அறிவுரை சொல்லும் முன்னே நான் இனிப்பு உண்பதை நிறுத்தவேண்டும் ... கடந்த ஒரு வாரம் நான் இனிப்பு உண்பதை நிறுத்திவிட்டேன் .... அதனால் இப்போது அறிவுரை சொல்கிறேன் என்றாராம் .... இதை இந்த அநீதிபதி தீர்ப்புடன் எப்படி வேண்டுமானாலும் பொருத்தி பார்த்துக்கொள்ளுங்கள் .....நல்லவேளை உச்சநீதிமன்றம் தலையிட்டு குட்டு குட்டி சரி செய்தது ......


Velan Iyengaar
செப் 23, 2024 16:06

இந்த அநீதிபதி உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கி அசிங்கப்பட்டான் ....சூடு சொரணை இருந்தால் ராஜினாமா செய்துவிடலாம்


சமீபத்திய செய்தி