உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பரீதாபாத் பல்கலையில் மாணவர் தற்கொலை

பரீதாபாத் பல்கலையில் மாணவர் தற்கொலை

பரீதாபாத்: டில்லி அருகே உள்ள ஹரியானா மாநிலத்தின் பரீதாபாத் நகரில் உள்ள பிரபல பல்கலைக்கழகம் ஒன்றின் மாணவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே மாதத்தில் நடந்த இரண்டாவது தற்கொலை சம்பவத்தால், பல்கலைக்கழகத்தில் பரபரப்பு நிலவுகிறது. பரீதாபாதில் உள்ள ஜே.சி.போஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், கடந்த 9ம் தேதி, வன்சிகா, 22, என்ற பி.டெக்., இறுதியாண்டு மாணவி, பல்கலைக்கழகத்தில் தான் தங்கியிருந்த ஹாஸ்டல் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், ஒரே மாதத்தில் இரண்டாவது தற்கொலை சம்பவம் அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடந்துள்ளது. ஹரியானாவின் ஹிசார் என்ற பகுதியை சேர்ந்த தக் ஷ், 18, என்ற மாணவர், பி.எஸ்சி., லைப் சயின்ஸ் பாடம் படித்து வந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த தீனதயாள் உபாத்யாயா கட்டடத்தில் இருந்த அறை ஒன்றில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில வாரங்களாக பல்கலைக்கழகம் வராத அந்த மாணவர், நேற்று முன்தினம் தான் வந்திருந்தார். நேற்று மதியம், தீனதயாள் உபாத்யாயா வளாகத்திற்கு சென்ற அவர், அங்கிருந்த அறை ஒன்றில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார், தக் ஷ் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் ஒப்புதலின் படி, பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பின், அவர் உடல் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி