தேர்வு பீதியால் மாணவி தற்கொலை
பெலகாவி: பெலகாவியின், விஸ்வேஸ்வரய்யா நகரின், பாரெஸ்ட் காலனியில் வசித்தவர் தீபிகா படிகேரா, 16. எஸ்.எஸ்.எல்.சி., மாணவி. மார்ச் 25ம் தேதி அவர் தேர்வு எழுதியிருந்தார்.பெயிலாகி விடுவோம் என்ற பயத்தில் அவர் மன அழுத்தத்துக்கு ஆளானார். இதனால், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.