உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவர் போராட்டம் மேலும் தீவிரம் உ.பி., அரசின் தீர்வை ஏற்க மறுப்பு

மாணவர் போராட்டம் மேலும் தீவிரம் உ.பி., அரசின் தீர்வை ஏற்க மறுப்பு

பிரயாக்ராஜ், உத்தர பிரதேச அரசு பணியாளர்கள் தேர்வு ஆணைய தேர்வு விவகாரத்தில், மாநில அரசு அறிவித்துள்ள தீர்வை மாணவர்கள் ஏற்க மறுத்து, கோரிக்கை முழுமையாக ஏற்கப்படும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர்.

எதிர்ப்பு

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநில அரசு பணியாளர்கள் தேர்வுக்கான முதல்நிலை தேர்வுகள், டிச., 7 மற்றும் 8ம் தேதிகளிலும், ஆய்வு அதிகாரி மற்றும் உதவி ஆய்வு அதிகாரிக்கான தேர்வு, டிச., 22 மற்றும் 23 தேதிகளில் நடத்தப்படும் என, உ.பி., அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்தது.இந்த தேர்வுகளை, நாளுக்கு இரண்டு ஷிப்ட் என்ற முறையில் நடத்தவும் திட்டமிடப்பட்டது. இதற்கு தேர்வர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. மாநில அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தை முற்றுகையிட்டு அவர்கள் நடத்தும் போராட்டம், நேற்று நான்காவது நாளை எட்டியது. இதையடுத்து, அரசு பணியாளர்களுக்கான தேர்வை ஒரு நாளில் ஒரே ஷிப்ட் முறையில் நடத்த மாநில அரசு ஒப்புக் கொண்டது.

ஷிப்ட் முறை

ஆய்வு அதிகாரி மற்றும் உதவி ஆய்வு அதிகாரிக்கான தேர்வை, ஒரே ஷிப்ட் முறையில் நடத்த முடியுமா என்பதை ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்படும் என அரசு தெரிவித்தது.இதை மாணவர்கள் ஏற்க மறுத்தனர். போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யவே அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டிய தேர்வர்கள், அனைத்து தேர்வையும் ஒரே ஷிப்ட் முறையில் நடத்தும் வரை போராட்டம் தொடரும் என, நேற்று அறிவித்தனர்.பிரயாக்ராஜில் உள்ள மாநில அரசு பணியாளர்கள் தேர்வாணையம் முன், நான்காவது நாளாக போராட்டத்தை நேற்று தீவிரப்படுத்தினர்.இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மத்தியில் ஊடுருவிய சில சமூக விரோதிகள், கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankar
நவ 15, 2024 10:41

சமூகவிரோதிகள் தலைவன்


நிக்கோல்தாம்சன்
நவ 15, 2024 07:55

தீர்வு என்று சொன்னால் அதனை நீர்த்து போக செய்யும் செயல் என்று கூறுகிறீர்கள்? அப்போ போராட்டத்தை நீடிப்பதினால் யார் இதனை தூண்டுகிறார்கள் என்றொரு கேள்வி வருகிறதே? உங்களுக்கெல்லாம் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாமலை பல்கலை மாணவர் உதயகுமாரை செய்தது போல செய்தால் தான் கூட்டணியில் சேருவீர்கள்


J.V. Iyer
நவ 15, 2024 05:06

ஜார்ஜ் சோர்ஸ்சின் தொல்லை தாங்கமுடியலை.


SUBBU,MADURAI
நவ 15, 2024 06:37

இந்த போராட்டத்தை பின்னால் இருந்து தூண்டி விடுவதே George Soros தான். சோனியாவின் காங்கிரஸ் கட்சியை பின்னால் இருந்து இயக்குவது சோரோஸூம் அவருடைய மகனும்தான் இது மட்டுமல்ல அவர்களுடைய...திட்டம் இன்னும் நிறைய உள்ளது அது ஒவ்வொன்றாக வெளியே வரும்.


Kasimani Baskaran
நவ 15, 2024 05:06

இரண்டு ஷிப்ட் என்றால் தேர்வு எழுதுவதில் என்ன சிரமம்? கல்லூரிகளில் காலையிலும் மாலையிலும் கூட தேர்வுகள் நடக்கத்தான் செய்கிறது.


Ganapathy
நவ 15, 2024 04:06

மாஸ் காப்பி அடிக்காகத்தான் இந்த போராட்டம். ஏதாவது ஒரு விஷயத்துல பிரச்சனையை தூண்டுவதே பப்பூ போன்ற காலேஜில் இருந்து போதைமருந்து மந்தபுத்தி காரணங்களால் விரட்டியடிக்கப்பட்ட படிக்காத முரட்டு மூர்க்க இடதுசாரி தற்குறிகள்தான். இவனை இங்கிலாந்திலும் டெக்ஸாஸிலும் காலேஜ்கள் விரட்டியடித்ததை இங்கு யாருக்கும் தெரியாது என நினைத்து மாணவர்களை முட்டாளாக்கி அவர்களது எதிர்காலத்தை நாசமாக்குகிறான்.


சமீபத்திய செய்தி