உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: உத்தராகண்டில், கன்னத்தில் அறைந்த ஆசிரியரை பழிவாங்குவதற்காக அவரை துப்பாக்கியால் சுட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். உத்தராகண்டின் உதம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள காசிபூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். சிகிச்சை இந்த பள்ளியில் இயற்பியல் பாட ஆசிரியராக ககன்தீப் சிங் கோலி பணியாற்றி வருகிறார். சமீபத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திய போது, பாடத்தை ஒழுங்காக கவனிக்காத சமரத் பஜ்வா என்ற மாணவரை ககன்தீப் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு பின், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு வந்த ககன்தீப், வழக்கம்போல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். உணவு இடைவேளைக்கு வகுப்பில் இருந்து புறப்பட்ட போது, தன் டிபன் பாக்சில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ககன்தீப்பை நோக்கி மாணவர் சமரத் பஜ்வா சுட்டார். இதில், கழுத்தில் குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ஆசிரியர் சுருண்டு விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கழுத்தில் இருந்த குண்டு எடுக்கப்பட்டது. இருப்பினும், தீவிர சிகிச்சை பிரிவில் ககன்தீப் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்ப முயன்ற மாணவர் சமரத்தை, ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கைது விசாரணையில், 'பிற மாணவர்கள் முன் கன்னத்தில் அறைந்ததால், வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து ஆசிரியர் ககன்தீப்பை சுட்டேன்' என, மாணவன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பின், சமரத்தை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அவனின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், சாலை விபத்து தொடர்பான வழக்கில் மாணவனின் தந்தை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

nisar ahmad
ஆக 22, 2025 20:44

சனாதானம் இதைதான் போதிக்கிறது.


Rathna
ஆக 22, 2025 11:52

இதேபோல அஹமதாபாதில் ஒரு மர்ம அமைதி வழி மாணவன் தனது சீனியர் மாணவனை கத்தியால் கொலை செய்தது அம்பலமாகி உள்ளது


sasidharan
ஆக 22, 2025 09:35

தந்தை வழியில் தனயன் . இதில் மாற்று கருத்து இல்லை என்பதை நிருபிவித்து விட்டான்


Thravisham
ஆக 22, 2025 08:48

உத்தரகண்ட் திருட்டு த்ரவிஷன்களின் குடும்பமா ?


Padmasridharan
ஆக 22, 2025 06:36

பெற்றோர்கள் எவ்வழி பிள்ளைகளும் அவ்வழி மன்னன் நல்ல அரசியல்வாதியானால் மக்களும் நல்வழி. பிள்ளைகளுக்கு சுதந்திரம் என்றால் மற்றவர்களை அழிப்பது என்பதைதான் நினைக்கிறார்களே தவிர நல்வளர்ச்சி அடையவேண்டுமென்பதில்லாமல் போய்விட்டது பல திரைப்படங்களினால்


சமீபத்திய செய்தி