மேலும் செய்திகள்
2028ல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக வினேஷ் போகத் அறிவிப்பு
1 hour(s) ago | 1
பார்லி குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
2 hour(s) ago | 3
பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை பஸ் நிலையத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பஸ் வசதி கேட்டு, நேற்று திடீர் போராட்டம் நடத்தினர்.பங்கார்பேட்டை, தங்கவயல் இடையே மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று வர போதிய பஸ் வசதி இல்லாமல், கடந்த மூன்று மாதங்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.'எனவே, தினமும் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையில் பஸ் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும். எக்ஸ்பிரஸ் பஸ்களிலும் மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி நேற்று திடீர் போராட்டம் நடத்தினர். ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது.மாவட்ட போக்குவரத்துத் துறை அதிகாரி சாந்தகுமார், மாணவர்களை சந்தித்து, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். அதன்பின், போராட்டம் கைவிடப்பட்டது.
1 hour(s) ago | 1
2 hour(s) ago | 3