தனியார் பல்கலையை சூறையாடிய மாணவர்கள்
போபால்: மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தின் இந்துார் - போபால் நெடுஞ்சாலையில் தனியார் பல்கலை இயங்கி வருகிறது. இங்குள்ள விடுதியில் தங்கியுள்ள 12க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டதால், பல்கலை நிர்வாகத்திடம் மாணவர்கள் முறையிட்டனர். நிர்வாகம் கண்டு கொள்ளாததை அடுத்து, நேற்று முன்தினம் இரவு 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமற்ற உணவால் மஞ்சள் காமாலை ஏற்பட்டதாக கூறி, பல்கலை வேந்தர் பங்களா உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர்; வாகனங்களுக்கும் தீ வைத்தனர். தகவலறிந்த போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.