உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தடுமாறிய நிதீஷ் குமார்

தடுமாறிய நிதீஷ் குமார்

தடுமாறிய நிதீஷ் குமார்

தேர்தல் பிரசார கூட்டத்தில் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறித்த தகவலை, முதல்வர் நிதீஷ் குமார் தவறாக கூறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், 'லோக்சபா தேர்தலில் நான்கு லட்சம் இடங்களில் வெற்றி பெற வேண்டும்' என கூறுகிறார். தவறாக கூறியதை திருத்திக் கொண்டு, 4,000 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என, மீண்டும் அவர் தவறாக கூறியுள்ளார். இதை ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்து வருகின்றன. ராஷ்ட்ரீய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் சரிகா பாஸ்வான், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'பிரதமருக்கு நான்கு லட்சம் எம்.பி.,க்கள் இருக்க வேண்டும் என, நிதீஷ் குமார் விரும்புகிறார். இது அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து, 4,000 எம்.பி.,க்கள் போதும் என, அவர் நினைக்கிறார்' என, கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை