உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா.,தேர்தலில் களம் இறக்கப்படும் வாரிசுகள்: கலகலக்குகிறது தேர்தல் களம்

மஹா.,தேர்தலில் களம் இறக்கப்படும் வாரிசுகள்: கலகலக்குகிறது தேர்தல் களம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முக்கிய அரசியல் தலைவர்களின் வாரிசுகளும் களம் இறக்கப்பட்டுள்ளதால் அரசியல் களம் கலகலக்கின்றன. இம்மாநில சட்டசபைக்கு நவ. 20-ல் தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் சிவசேனா ஆகிய கட்சிகள் மஹா விகாஸ் அகாடி என்ற கூட்டணியையும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்., பா.ஜ., ஆகிய கட்சிகள் மஹாயூதி என்ற கூட்டணியையும் அமைத்துள்ளது.இரு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாமல் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மஹாயூதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே கட்சியின் 45 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலும், அஜித்பவார் கட்சியிலிருந்து 38 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது.

மஹாயூதி அணி அரசியல் வாரிசுகள்

இதில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியில் மூத்த தலைவர் நாராயணன் ரானே மகன் நிலேஸ் ரானேவும், எம்.என்.எஸ். எனப்படும் மஹாராஷ்டிரா நவநிர்மான சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே மகன் அமித் தாக்கரே முன்னாள் முதல்வர் அசோக் சவானின் மகள் ஸ்ரீஜெயா சவான், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மஹாவிகாஸ் அகாடி அணி அரசியல் வாரிசுகள்

இதே போன்று மஹாவிகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள உத்தவ் சிவசேனா கட்சியில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவும், தேசியவாத காங். கட்சியிலும் வாரிசு போட்டியிட உள்ளதால், மூலம் இத்தேர்தலில் வாரிசுகள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Balasubramanian
அக் 24, 2024 18:09

வாரிசுகள் தான் வாழ வேண்டும் பரம்பரை பரம்பரையாக ஆள வேண்டும் என்றால் இது என்ன ஜன நாயகம்?


Ramesh Sargam
அக் 23, 2024 23:00

தகுதி இல்லாத வாரிசுகளுக்கு, அதாவது அறிவு ,தகுதி இல்லாத வாரிசுகளுக்கு தேர்தலில் நிற்க இடம் கொடுக்கக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை