உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  துவாரகாவில் ஓடும் காரில் திடீர் தீ

 துவாரகாவில் ஓடும் காரில் திடீர் தீ

புதுடில்லி : தென் மேற்கு டில்லியில் உள்ள துவாரகாவில், மாருதி ஸ்விப்ட் கார் நேற்று பகலில் தீப்பிடித்து எரிந்தது. எனினும், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. துவாரகாவில் நேற்று மதியம், 12:40க்கு சாலையில் சென்று கொண்டிருந்த மாருதி ஸ்விப்ட் கார், தீப்பிடித்து எரிவதாக, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர், 1:20 மணிக்குள் தீயை அணைத்தனர். எனினும், அந்த காரில் லேசாக தீப்பற்றியுள்ளது என்பதை அறிந்த அந்த காரை ஓட்டி வந்தவர்கள், கீழே இறங்கி, தப்பினர். அவர்கள் யார், அந்த கார் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை