உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுதீப், அனுபமா கவுடாவுக்கு சிறந்த நடிகர், நடிகை விருது

சுதீப், அனுபமா கவுடாவுக்கு சிறந்த நடிகர், நடிகை விருது

பெங்களூரு: கர்நாடக மாநில அரசு, 2019ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை நேற்று அறிவித்தது. நடிகர் சுதீப், நடிகை அனுபமா கவுடா உட்பட, பலர் விருது பெற்றுள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு பின், திரைப்பட விருதுகளை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. 25 பிரிவுகளில் விருது அளிக்கப்படுகிறது. இயக்குநரும், தயாரிப்பாளருமான நஞ்சுண்டே கவுடா தலைமையிலான கமிட்டி, விருதுக்குரியவர்களை தேர்வு செய்துள்ளது.விருது பெற்றவர்கள் விபரம்: சிறந்த நடிகர் - சுதீப் - 'பயில்வான்'  சிறந்த நடிகை - அனுபமா கவுடா - 'திரயம்பகம்'  சிறந்த துணை நடிகர் - தபலா மணி - 'கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா'  சிறந்த துணை நடிகை - அனுஷா கிருஷ்ணா - 'பிராம்ஹி' சிறந்த கதை - ஜெயந்த் காய்கனி - 'இல்லிரலாரே அல்லிகே ஹோகலாரே' சிறந்த திரைக்கதை - பரகூர் ராமசந்திரப்பா - ' அம்ருதமதி' சிறந்த ஒளிப்பதிவு - பாஸ்கர் - 'மோகன்தாஸ்' சிறந்த குழந்தை நட்சத்திரம் - மாஸ்டர் பிரீத்தம் - 'மிஞ்சுஹுளா'  சிறந்த பெண் குழந்தை நட்சத்திரம் - வைஷ்ணவி - 'சுகந்தி'  சிறந்த பின்னணி பாடகி ஜெயதேவி - 'ராகபைரவி' சிறந்த பின்னணி பாடகர் ரகு தீக்ஷித் - 'லவ் மாக்டெய்ல்' சிறந்த தயாரிப்பாளர் ராஜ் - 'தமட்டே நரசிம்மையா' சிறந்த இசை அமைப்பாளர் ஹரி கிருஷ்ணா - 'யஜமானா'  முதலாவது சிறந்த படம் - 'மோகன்தாஸ்'  இரண்டாவது சிறந்த படம் - 'லவ் மாக்டெய்ல்'  மூன்றாவது சிறந்த படம் - 'ஆர்கம்'  சிறந்த சமூக அக்கறை கொண்ட படம் - 'கன்னேரி'  சிறந்த பாடலாசிரியர் ரஜாக் புத்துார் - 'பென்சில் பாக்ஸ்'  சிறந்த குழந்தைகள் படம் - ' எல்லி ஆடோது நாவு எல்லி ஆடோது' சிறந்த பொழுது போக்கு படம் - 'இந்தியா வெர்சஸ் இங்கிலாந்து'இதுபோன்று, பல்வேறு பிரிவுகளில், விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !