உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் நிகழ்த்தப்பட்டது தற்கொலைப்படை தாக்குதல்: போலீசார் தகவல்

டில்லியில் நிகழ்த்தப்பட்டது தற்கொலைப்படை தாக்குதல்: போலீசார் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என டில்லி போலீசார் தெரிவித்தனர்.ஜம்மு - காஷ்மீரில் நம் பாதுகாப்பு படைகளுக்கு மிரட்டல் விடுத்து, போஸ்டர்களை ஒட்டிய டாக்டர் அடில் அகமது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை மூலம் ஜம்மு - காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2,500 கிலோ வெடிப்பொருட்கள், ஏ.கே.56, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், டைமர்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8it2c3az&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டாக்டர் அடில் அகமதுவுடன், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலா பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீல் கைது செய்யப்பட்டார். அவரின் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரில் இருந்தும் சிறிய ரக ஏ.கே.47 துப்பாக்கிகள், 83 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக் குவியலையும் பறிமுதல் செய்தனர்.இது தவிர வாக்கி டாக்கிகள், எலெக்ட்ரிக் வயர்கள், பேட்டரிகள், மெட்டல் ஷீட்கள், வெடிகுண்டு தயாரிப்பை விளக்கும் குறிப்பேடுகள் ஆகியவையும் சிக்கின. இந்நிலையில் நேற்று தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.

2 பேர் கைது

இதில், 12 பேர் உயிரிழந்தனர்; பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில், பரிதாபாத்தில் இருந்து செயல்பட்டு வந்த தனது கூட்டாளிகள் போலீசாரிடம் சிக்கியதால், பயங்கரவாத அமைப்பை சேர்ந்த புல்வாமா டாக்டர் உமர் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தியது டில்லி போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாதி உமர் வீட்டில் இருந்து செல்போன், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இது குறித்து டில்லி போலீசார் கூறியதாவது: இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று தெரிகிறது. விசாரணையில் சந்தேக நபரின் நோக்கம் தெரியவந்துள்ளது. பரிதாபாத்தில் பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டது தெரிந்தவுடன் அவர் தற்கொலைத் தாக்குதலைத் திட்டமிட்டார். குண்டுவெடிப்புக்குப் பின்னால் உள்ள நோக்கத்தைக் கண்டறிய அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

அமித்ஷா ஆலோசனை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவரது இல்லத்தில் உயர்மட்ட பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர், தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் மற்றும் டில்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீர் டிஜிபியும் இந்தக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்து கொண்டார்.

மவுன அஞ்சலி

டில்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுப்ரீம்கோர்ட்டில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

என்னத்த சொல்ல
நவ 11, 2025 16:00

போலீசாரும், அதிகாரிகளும் விளக்கம் அளிப்பது தவருனு நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. விசாரணையை பாதிக்கும். அது தெரியாமல் இந்த டெல்லி போலீஸ் .....


Marai Nayagan
நவ 11, 2025 14:37

சிலர் என்ன படிச்சாலும்....மூட நம்பிக்கைகள் கொண்ட மத நூல்கள் உண்மை என நம்பி தவறான வழியில் முளை சலவை சிறு வயதிலேயே செய்ய படுவது இங்கே வெளிச்சம்


cpv s
நவ 11, 2025 14:15

india must be followed the israle method to eliminate terrorist and its people


Rajah
நவ 11, 2025 14:07

இது பீஹார் தேர்தலை இலக்கு வைத்து நடத்தப்பட்டது என்று மொகலாயர்களின் பிறந்த வாரிசுகள் குரைக்கின்றார்கள்.


RAMESH KUMAR R V
நவ 11, 2025 13:29

இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க உள்நாட்டு வெளிநாட்டு தேசத்துரோகிகளின் சதித்திட்டம். இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.


Barakat Ali
நவ 11, 2025 13:19

தற்கொலைப் படைத் தாக்குதல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது ..... ஒரு உயிரைக் கொல்பவன் உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் கொன்றவனாவான் ....


Gnana Subramani
நவ 11, 2025 13:05

எல்லைக்கு அப்பாலிருந்து டெல்லிக்கு வந்து தாக்குதல் நடத்தும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது.


ராஜ்
நவ 11, 2025 14:26

அரைகுறையாக படித்து கருத்து போட கூடாது அவர்கள் இந்தியாவில் இருப்பவர்கள்


Balasubramaniam
நவ 11, 2025 18:18

அவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டு தேசத்துக்கு துரோகம் செய்யும் கூட்டம்


நிக்கோல்தாம்சன்
நவ 11, 2025 13:01

சிறுபான்மையினர் என்று கூறி எல்லாம் இலவசம், மருத்துவம் படிக்க உதவிய மக்களுக்கே வரிப்பணத்தின் பிரதிபலனாய் மரணம் பரிசு கொடுத்த மதம் இன்னமும் வேண்டுமா என்று கேள்வி எழவே இல்லை


cpv s
நவ 11, 2025 14:13

this people never keep silent will do like this only so the total people must be send out to pakistan


RK
நவ 11, 2025 12:47

இஸ்ரேல் பாணியில் இந்தியா நடக்க வேண்டும். தீவிரவாதிகளை கண்டதும் சுட்டு பொசுக்க வேண்டும்.


Sambath
நவ 11, 2025 12:29

குண்டு வைத்தவர்களும் அவர்களின் கொள்கைகளும் விலங்குகளை விட தாழ்ந்த மற்றும் கொடூரமானவை